12920 – பாரதிநேசன் வீ.சின்னத்தம்பி நினைவுமலர்.

நினைவு மலர்க்குழு. கனடா: பாரதிநேசன் வீ.சின்னத்தம்பி நினைவுக்குழு, ஒன்ராரியோ, 1வது பதிப்பு, ஜுலை 2001. (கனடா: ரோயல் கிராப்பிக் ஸ்தாபனம்).

(6), 116 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21 x 14 சமீ.

அண்ணல் வழி தொடர்ந்திடுவோம் ஆட்சி காண்போம், முன்னுரை, அணிந்துரை, சின்னத்தம்பியின் சிந்தனைத் தெளிவு என்றைக்கும் எமக்கு வழிகாட்டும், மணிவிழாக் காலத்தில் துணைவியூர்க் கேசவனிக்குத் தம்பி அளித்த பேட்டி (க.கந்தசமி), அவன் வழி மலர வைப்போம் பொதுவுடமைச் சமுதாயம் (த. சிவபாலு), பாசம் நிறைந்த அண்ணர் பெருமலையாய் சரிந்தார் (வீ.கனகசபை), எமது மைந்துனர் ‘தம்பி மாமா’ (மு.கார்த்திகேசன் குடும்பம் சார்பாக புதல்வி ஜானகி பாலகிருஷ்ணன்), சமூக சேவையாளர் வீ.சின்னத்தம்பிக்கான மணிவிழா பற்றி, மணி விழா நிகழ்வுகள், ஆய்வரங்கு, பத்திரிகையாளர் திரு.வீ.சின்னத்தம்பி அவர்களின் வாழ்வுக் குறிப்புக்கள், மணிவிழா காணுந் தம்பியின் ‘மணியான காலந்’ தொடர்ந்திடுக, மூத்த எழுத்தாளர் திரு.வீ.சின்னத்தம்பி மன நிறைவு வாழ்த்து, மணி விழா எழுத்தாளர் பாரதி நேசன் வீ.சின்னத்தம்பிக்கான பாராட்டு விழா பற்றி, பாரதி நேசனின் கருத்துக்களில் உண்மையும் நேர்மையும் கரும்பொருளாக இருக்கும். பீக்கிங் பிரதிநிதி சீனாத்தம்பியின் உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் வரவேற்பு பற்றி. தோழர் வீ.சின்னத்தம்பி மறைவைத் தொடர்ந்து, பாரதிநேசன் காலமானார், பீக்கிங் வானொலி முன்னாள் ஒலிபரபாளர் காலமானார், மூத்த பத்திரிகையாளர் சின்னத்தம்பியின் கண்கள் தானம் பூதவுடல் மருத்துவபீடத்திற்கு, வட்டுக்கோட்டையில் கறுப்புக்கொடிகள், துயர்பகிர்வும் அஞ்சலியும் அமரர் வீ.சின்னத்தம்பி அவர்கள், மறைந்த சின்னத்தம்பியின் கண்களால் இருவர் வாழ்வில் ஒளி, பத்திரிகையாளரின் கண் கோண்டாவில்வாசி ஒருவருக்கு, பத்திரிகையாளரின் 2வது கண் யாழ்.மாநகர சபை ஊழியருக்கு, தோழர் வீ.சின்னத்தம்பி அவர்களுக்கு செங்கொடி தாழ்த்தி அஞ்சலி செலுத்துவோம், அஞ்சலி கூட்ட விமர்சனம், பீக்கிங் சின்னத்தம்பி சிந்தனையால் மிக உயர்ந்தோன், நெஞ்சில் நிறைந்த நண்பர் சின்னத்தம்பி, மானிடம் போற்றிய பாரதிநேசன், அமரர் வீ.சின்னத்தம்பியின் ஆக்கங்களும் படைப்புகளும், ஓ கனடா கலைந்த கனவு, கம்யூனிஸ்ட் பிரகடனம் வரலாறாகி விடவில்லை, பிரகடனத்தின் தோற்றம், கம்யூனிஸ்ப் பிரகடனம் என்றது ஏன், பிரகடனம் காலாவதியாகி விட்டதா, உள்ளடக்கம், ஒக்டோபர் புரட்சியில் மலர்ந்த சோவியத் யூனியன் சிதைந்தது ஏன், மாக்சியத்தின் வெற்றி, ஓக்டோபர் புரட்சியின் சாதனைகள், சோவியத் யூனியன் ஏன் சிதைந்தது, நித்திய ஒளி, தோழமை நிறைந்த உளமார்ந்த நன்றிகள் அனைவர்க்கும் ஆகிய தலைப்புவழிக் கட்டுரைப் பதிவுகளின் மூலம் அமரர் வீ.சின்னத்தம்பியின் வாழ்வும் பணிகளும், அவரது மறைவின் நிகழ்வுகளும் பதிவுசெய்யப்பட்டுள்ளன. இந்த நினைவு மலர்க்குழுவில் க.சிவபாலு, க.கந்தசாமி, வீ.கனகசபை, ஜானகி பாலகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்றிருந்தனர். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 39900. நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தின் சேர்க்கை இலக்கம் 004150).

ஏனைய பதிவுகள்

Brazil Online Casinos

Content Casinos Ao Álacre Casino Of The Month Apontado, Entreposto Como : Alucinação Completa Dos Serviços Para Novos Aquele Veteranos Jogadores Afinar Pressuroso Pôquer Como