16081 இணுவில்அருள்மிகு சிவகாமி அம்பாள் ஆலய வரலாற்றுப் பதிவுகள்.

மூ.சிவலிங்கம். யாழ்ப்பாணம்: கலாபூஷணம் மூ.சிவலிங்கம், இணுவில், 1வது பதிப்பு, பங்குனி 2023. (யாழ்ப்பாணம்: சுடர்நிலவு கிராப்பிக்ஸ், இணுவில் கிழக்கு, இணுவில்).

xxvi, 212 பக்கம், 26 தகடுகள், விலை: ரூபா 1000., அளவு: 25×18.5 சமீ.

கலாபூஷணம் மூ.சிவலிங்கம் அவர்கள் தனது 90ஆவது அகவையில் எழுதி வழங்கியுள்ள இந்நூல் அவரது 33 ஆவது நூலாகும். இந்நூலில் நூல்முகம், இணுவில் சிவகாமி அம்பாளின் ஆலய அமைவிடம், சிவகாமி அம்பாளின் இன்றையஆலய வளர்ச்சியின் ஆரம்பகாலம், சிவகாமி அம்பாளின் பல்துறை ஆலயப் பணிகளின் மையமான வ.கா.வயிரவப்பிள்ளையின் சுருட்டுக் கொட்டில், சிவகாமி அம்பாளின் திருப்பணியில் சாத்திரம்மா, சாத்திரம்மாவின் காலத்தில் நடைபெற்ற இதர கட்டுமானங்கள், அன்னையின் அருள்பெற்ற அடியார் வரிசையில், சைவத் திருநெறிக் கழகத் தொண்டர்களும் சிவகாமி அம்பாளின் பாடல்களும், இணுவில் சைவத் திருநெறிக் கழகத்தின் பன்முக அறப்பணிகள், சிவகாமி அம்பாளின் அதிசிறந்த விழாக்கள், ஆலய தர்மகர்த்தாக்களின் பரம்பரை, இவ்வாலயத்தின் பூசைகள் விழாக்கள் பெருவிழாக்கள், இவ்வாலயத்தில் பவனி வரும் ஊர்திகள், இவ்வாலயச் சூழலில் வளர்ந்த அறப்பணிகளும் சைவசமய கலை கலாசாரப் பண்பாடும் மண்ணின் எழுகோலமும், சிவகாமி அம்பாளின் பெருமையை உணர்த்தும் சான்றுகள், தொண்டர் தம் பெருமை, இங்கு நடமாடிய சித்தர்களும்; அருளாளர்களும் இச்சூழலின் எழுகோலமும், இவ்வாலய ஆரம்பகாலத் தொடரின் தொகுப்பு, சிவகாமி அம்மன் கோயிலின் புனர் நிர்மாண வளர்ச்சி, இவ்வாலயத்தில் அமைந்த திருமண மண்டபம், இவ்வாலயத்தின் பெருஞ்சாந்தி விழாவும் திருக்குடமுழுக்கு நன்னீராட்டு விழாவும் (கும்பாபிஷேகம்) நடைபெறுவதற்கு ஏற்பட்ட காலதாமதம், சிவகாமி அம்மன் கோவில் இன்றைய பரிபாலகரின் பரம்பரையில் நடைபெற்ற கும்பாபிஷேகங்கள், இவ்வாலயத்தின் பருவகாலத் தொண்டர்களின் சிறப்பு,  இவ்வாலய வடிவமைப்பில் ஏற்பட்ட சிறப்பான மாற்றங்கள், ஆலயப் பணியாற்றியோரின் பிள்ளைகள் நிறுவிய இன்றைய நினைவுச் சின்னங்கள், கும்பாபிஷேக மகிமை, இவ்வாலயத்தின் ஆறாவது மகா கும்பாபிஷேக ஏற்பாடும் நாலாம் தலைமுறையான ஆலய பரிபாலகரின் பணிச்சிறப்பும், இப்பெருஞ்சாந்தி விழாவைச் சிறப்பிக்க வந்த சிவாச்சாரியார்கள், இவ்வாலயத்தில் 27.03.2022 நடைபெற்ற பெருஞ்சாந்தி நிறைவும் குடமுழுக்கும், 28.03.2022 காலை மண்டலாபிஷேகம் தொடர்ந்து 48 நாட்கள் சிவகாமி அம்பாளின் ஆலயத்தில் நித்திய பூசைகளின் விபரம், கும்பாபிஷேக நிகழ்வில் கலைகளின் காணிக்கையாக இசைப்பேழைகளின் வெளியீடுகள், இவ்வாலயத்தின் மீது பாடப்பெற்ற பாடல்கள், நூலை அணிசெய்த சான்றுகள், நிறைவாக ஆகிய 33 தலைப்புகளில் இவ்வரலாற்று நூல் எழுதப்பட்டுள்ளது.                                                                                                    

ஏனைய பதிவுகள்

Three Eyed Bingo オンライン 100% 無料で賭けて、リアルマネーを獲得できます

ビンゴはさまざまなゲームの組み合わせから成り、賞品もいくつかあります。部屋に入る前に、基本的な組み合わせをいくつか覚えておきましょう。これは、私たちのブログで初心者向けにビンゴの遊び方を詳しく説明した本です。 オンラインビンゴゲームでギャンブルをするときに覚えておくべきことは何ですか?

Top 25+ Vortragen Automatenspiele Online

Content Slot Choco Reels: Sie können keineswegs ausfindig machen, was Eltern abgrasen? Bei keramiken sind 3 Top Casinos Was bedeutet unser Auszahlungsquote in Erreichbar Spielautomaten?