16083 ஈழத்து ஆலயங்கள்: யாழ். மாவட்ட திருத்தலங்கள் (பாகம் 1).

வை.சோமசேகரன் (தொகுப்பாசிரியர்). கொழும்பு 2: அகில இலங்கை இந்து மாமன்றம், 91/5, சேர் சிற்றம்பலம் ஏ கார்டினர் மாவத்தை, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2015. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ், 48 B, புளுமெண்டால் வீதி).

xxxi, 735 பக்கம், 24 தகடுகள், புகைப்படங்கள், விலை: ரூபா 1250., அளவு: 26.5×19 சமீ., ISBN: 978-955-1133-03-0.

அகில இலங்கை இந்து மாமன்றத்தின் அறுபதாவது ஆண்டு வைரவிழாவையொட்டி யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற இந்து ஆராய்ச்சி மாநாட்டில் வெளியிடப்பட்ட நூல். வேலணையைப் பிறப்பிடமாகக் கொண்ட வைரமுத்து சோமசேகரன் யாழ் மாவட்ட திருத்தலங்களின் வரலாறுகளை ஈழத்து ஆலயங்கள் என்ற இந்நூலில் தொகுத்திருக்கிறார். இதில் 70 விநாயகர் ஆலயங்களும், 52 சிவன் ஆலயங்களும், 105 அம்மன் ஆலயங்களும், 50 முருகன் ஆலயங்களும், 59 வைரவர் ஆலயங்களும், 28 ஏனைய ஆலயங்களுமாக மொத்தம் 364 சைவ ஆலயங்களின் வரலாறுகள் தொகுக்கப்பட்டுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 59215).

ஏனைய பதிவுகள்

FDIC adopts Advice to have Appeals

Blogs All of us banks’ industrial dumps are straight back to your a route to development Want much more term deposit possibilities? Negative taxation Very