16093 நக்கீரம் 2006-2007 (கணை 8).

வித்யா அம்பிகைபாகன், நிருஷ்யா செல்வநாதன்  (இதழாசிரியர்). கொழும்பு 12: சட்ட மாணவர் இந்து மகாசபை, இலங்கை சட்டக் கல்லூரி, 244, ஹல்ஸ்ரோப் (புதுக்கடை) வீதி, 1வது பதிப்பு, 2007. (கொழும்பு 12: வக்மீ அச்சகம், 258/3, டாம் வீதி).

(28), 189பக்கம், ஒளிப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24.5×17.5 சமீ.

இலங்கைச் சட்டக் கல்லூரியின் சட்ட மாணவர் இந்து மகா சபையின்; 2006-07ஆம் ஆண்டுகளுக்கான ஆண்டு மலர் இதுவாகும். பல்வேறு தமிழ் ஆங்கிலக் கட்டுரைகளுடன் வெளிவந்துள்ளது. ஆசிச் செய்திகள், வருடாந்த அறிக்கைகளுடன் சமயமும் சமூகமும், சட்டமும் அரசியலும் ஆகிய இரு பிரிவுகளின் கீழ் படைப்பாக்கங்கள் ஒழுங்குபடுத்தித் தரப்பட்டுள்ளன. ‘சமயமும் சமூகமும்” என்ற பிரிவில் அறமும் ஆண்டவனும் (கம்பவாரிதி இ.ஜெயராஜ்), குறிக்கோள் (வசந்தா வைத்தியநாதன்), நம்பிக்கை தான் வாழ்க்கை (எஸ்.என்.உதயநாயகன்), கும்பாபிஷேகமும் கிரியைகளும் (ஸ்ரீலஸ்ரீ வைத்தியநாத பாலசுந்தரசிவாச்சாரியார்), பேரின்பத்திற்கு வழி (A.கங்காதரன்)இ சமய நெறியில் பண்பாடு (த.கனகரத்தினம்), Peace is Possible (Nalini Kaneshayogan), சட்டத்தின் அடிப்படை சமயமே (V.S.மகாலிங்கம்), சைவ வாழ்வும் ஆன்மீகமும் தற்காலச் சமுதாயத்திற்கு அவற்றின் பொருத்தப்பாடு (குமாரசாமி சோமசுந்தரம்), இலங்கையின் சமயரீதியான குடித்தொகையின் பிரதேசப் பரம்பல் (ஆர். ஸ்ரீகாந்தன்), Of Religious Identities and Nationalists Fervour (MinnaThaheer),பின் நவீனத்துவத்தின் பின்னால் (பவானி முகுந்தன்), சமயம் காட்டும் வாழ்வு நெறி (ம.பத்மநாதன்), Hurdles and Problems of Cultural Coexistence (S.M.N.S.A.Marsoom), நீதி நெறிமுறி தரும் சமயவாழ்வு (மேனகா கேசவன்), ஆறுபத்து நான்கினுள் ஓர் உன்னதமாம் இசைக்கலை: வரலாற்று நோக்கு (ஷர்மிளதர்ஷினி சிவஞானம்), சட்டத்தின் அடிப்படை சமயமே (இ.பிரியதர்ஷினி) ஆகிய கட்டுரைகளும், ‘சட்டமும் அரசியலும்” என்ற பிரிவின் கீழ் பயங்கரவாதம் என்றால் என்ன? (க.வி.விக்னேஸ்வரன்), பிரிவிடல் சட்டம் (எஸ்.இளங்கோவன்), Categories of Bodily Injury Specified in The Penal Code (Palitha Fernando) அடிப்படை உரிமைகளும் மீறல்களும் (செ.செல்வகுணபாலன்), Expressions of Folklore: Protection Under the Intellectual Property Law (D.M.Karunaratna), Public Service And Fundamental Rights: Have we Overlooked The Fundamentals? (Viveka Sriwardena de Silva), குடும்ப வன்முறைத் தடுப்புச் சட்டத்தின் சில அம்சங்கள் (A.சர்வேஸ்வரன்), காலக்கிரமத்தில் உண்டியலொன்றை வைத்திருப்பவன் காலத்தை வென்றவனா? (சாந்தி செகராஜசிங்கம்), உரிமைகள் (சி.அ.யோதிலிங்கம்), இலங்கையில், ஆயுத மோதலினாலான உள்நாட்டு இடப்பெயர்வு (சாமினி சந்திரன்), Demarcation of High Security Zones and the Resultant Mass Displacement of Civilians in Conflict Affected Areas (Swarnarajah Nilakshan), Anticipatory Bail (Aravinda R.I.Athurapane), Bio Genetic Piracy and Patending (Hamsakanambiha Vamadeva),நிர்வாக நடவடிக்கைகளில் நீதிமுறை மீளாய்விற்குக் காரணங்களை வழங்குதல் உறுதியான தளமாகக் காணப்படுகின்றன (ஷர்மினி விக்னேஸ்வரன்), பித்து நிலை எதிர்வாதமாக—(ஷோபனா அசோகதாசன்), சுயநிர்ணய உரிமை (நிருஸ்யா செல்வநாதன்), குற்றத்தின் பகுதியொன்றாக குற்ற மனம் (F.Madeeha Mawoon), அடிப்படை உரிமை மீறல்கள்: அகதிமுகாம் வாசியின் குரல் (மேனகா கேசவன்), Europen Union (Vithya Anbigaibagan) ஆகிய கட்டுரைகளும் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்

POKIE REVIEWS

Cryptocurrency bitcoin How does cryptocurrency work POKIE REVIEWS Node owners are either volunteers, those hosted by the organization or body responsible for developing the cryptocurrency

Jogue island Slot online Demanda

Content E Aprestar Arruíi Acabamento Puerilidade Caça Dinheiro Era Do Gelo 3 Jogue Os Melhores Jogos Infantilidade Caça Niquel Halloween Gratis: Ice Age Franqueza Que