16105 நல்லைக்குமரன் மலர் 2015.

நல்லையா விஜயசுந்தரம் (பதிப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: சைவசமய விவகாரக்குழு, யாழ்ப்பாண மாநகராட்சி மன்றம், 1வது பதிப்பு, 2015. (யாழ்ப்பாணம்: மதி கலர்ஸ், 15/2B, முருகேசர் ஒழுங்கை, நல்லூர்).

x,172+(70) பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 25.5×18.5 சமீ.

இது நல்லூர் கந்தசுவாமி கோயில் தேர்த்திருவிழாவை முன்னிட்டு வருடாந்தம் வெளியிடப்படும் மலர். 23ஆவது மலராக 2015ஆம் ஆண்டு நல்லூர்த் திருவிழாவின் போது இச்சிறப்பிதழ் வெளிவந்துள்ளது. ஆசிச்செய்திகளுடன் நல்லையம் பதிவாசன் நயந்து வந்தான் (ச.தங்கமாமயிலோன்), நானயர்ந்தும் மறவேன் முருகனை (சிவ.சிவநேசன்), விபரீதங்கள் அகல மயில் வருக உயர் ஐஸ்வர்யங்கள் தர மயில் ஏறி வருக (கை.பேரின்பநாயகம்), நல்லைக்குமரன் வெண்பா மாலை (வ.சின்னப்பா), முருகா உனைப் பார்த்தேன் உடல் வேர்த்தேன் (வேலணையூர் சுரேஷ்), நம் நல்லூரான் (த.ஜெயசீலன்), நல்லைக் குமரா நாசகாரரை அழித்திட எடுத்திடு வேலை (வ.யோகானந்தசிவம்), தேவார திருவாசக திருத்தொண்டர் படிப்போம் (க.அருமைநாயகம்), நாமும் உந்தன் புகழ் பாடுகின்றோம் நல்லூரானே (க.கிருஷ்ணராஜன்), அழகு வேல் தனை அனுப்பிடப்பா (வதிரி கண.எதிர்வீரசிங்கம்), வந்தருள் தந்திடுவாய் (கீழ்க்கரவை கி.குலசேகரன்), கதி நீயே எந்தனுக்கு (கே.ஆர்.திருத்துவராஜா), நல்லைக் கந்தன் நனிவிருத்தம் (நவ.பாலகோபால்), திருமுருகாற்றுப்படையில் வழிபாடும் வாழ்வியலும் (மனோன்மணி சண்முகதாஸ்), திருப்புகழும் முருக வழிபாடும் (சிவ.மகாலிங்கம்), தர்க்கச் சிறப்புக் கொண்ட சங்கர வேதாந்தம் (சிவகுமார் நிரோசன்), அன்பும் சித்தாந்த வாழ்வியலும் (க.கணேசதேவா), சிவாகம மரபில் சைவசித்தாந்த நூல்கள் குறிப்பிடும் தசகார்யம் (மகோற்சவம்) பற்றிய சில குறிப்புகள் (மகேஸ்வரக் குருக்கள் பாலகைலாசநாத சர்மா), கந்தர் அலங்காரம் காட்டும் முருகன் திருவுளம் (வ.கோவிந்தப்பிள்ளை), சமய நெறியை வளமாக்கிய நாயன்மார்கள் (சுவாமிநாதபிள்ளை தேவமனோகரன்), தமிழரின் தொன்மையைக் குறிக்கும் வேல் வணக்கம் (ச.லலீசன்), ஐக்கியவாத சைவம் (தி.செல்வமனோகரன்), திருவள்ளுவரும் சமயமும் (ஆ.வடிவேலு), திருக்கோணேஸ்வரம் (பொ.சிவப்பிரகாசம்), சித்தர்கள் பரம்பரையில் அவதரித்த ஞானசீலரான தவத்திரு வடிவேற் சுவாமிகள் (இணுவையூர் மூ.சிவலிங்கம்), சிவபிரானை வயப்படுத்திய சுந்தரரின் செந்தமிழ்ப் பாடல்களின் சிறப்பு (வை.சி.சிவசுப்பிரமணியம்), திருவாசகம் தந்த வாழ்வியல் நெறி (பத்மராசா பத்மநிருபன்), நாயே நாயேன் மணி வார்த்தை (சி.யமுனானந்தா), குடும்பமும் துறவும் (அ.சண்முகதாஸ்), சைவனாக வாழ்வோம் சைவநெறியைப் பாதுகாப்போம் (வை.பாலகிருஷ்ணன்), ஆறுவது சினம் (அருள்மொழி சுதர்மன்), சட்டம் கூறும் மதம் (ஜெகநாதன் தற்பரன்), அருணகிரியாரும் பெண்ணுலகும் (சிவஸ்ரீ க.ஜெயராமக் குருக்கள்), தமிழரின் கலையும் பண்பாடும் (இராசையா ஸ்ரீதரன்), இந்துப் பண்பாட்டுக்கு சார்ள்ஸ் வில்கிங்ஸ் அவர்களின் பங்களிப்பு (புவிலோகசிங்கம் அருள்நேசன்), கந்தக் கடவுளும் கந்தபுராணமும் கச்சியப்ப சிவாச்சாரியாரின் பக்தித் திறமும் (சரோஜினிதேவி சிவஞானம்), முருக வழிபாடு (தயாளினி செந்தில்நாதன்), 2015இல் யாழ். விருது பெறும் பேராசிரியர் கந்தையா தேவராஜா (பு.ஆறுமுகதாசன்) ஆகிய ஆக்கங்கள் இம்மலரில் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்

Vintage & Progressive Position Game

Posts Casino Redbet login: SVG – AWS, Genius Sporting events, Bing Cloud, IBM to the AI revolutions and its effect on sporting events sending out