16108 நல்லைக்குமரன் மலர் 2022.

மலர்க் குழு. யாழ்ப்பாணம்: சைவசமய விவகாரக்குழு, யாழ்ப்பாண மாநகராட்சி மன்றம், 1வது பதிப்பு, 2022. (யாழ்ப்பாணம்: மதி கலர்ஸ், 15/2B, முருகேசர் ஒழுங்கை, நல்லூர்).

vi, (12), 74 + (56) பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 25.5×18.5 சமீ.

இது நல்லூர் கந்தசுவாமி கோயில் தேர்த்திருவிழாவை முன்னிட்டு வருடாந்தம் வெளியிடப்படும் மலர். 30ஆவது மலராக 2022ஆம் ஆண்டு நல்லூர்த் திருவிழாவின் போது இச்சிறப்பிதழ் வெளிவந்துள்ளது. ஆசிச்செய்திகளுடன் சிவன் நெற்றிக்கண் உதித்த அழகு வேலவா (சின்னப்பு தனபாலசிங்கம்), நெஞ்ச மனையில் நின்று உறை நீ (த.ஜெயசீலன்), நல்லூரான் மணியோசை நாளும் துயிலெழுப்பும் (கே.ஆர்.திருத்துவராஜா), கீர்த்தனை (இராசையா ஸ்ரீதரன்), நல்லைப்பதி நாயகன் (ஸ்ரீமதி சுபாஷினி), குறைகளைத் தீருமையா (கீழ்கரவை கி.குலசேகரன்), காடு மலை விட்டு நீயும் மயிலேறி வந்திடப்பா (வதிரி கண.எதிர்வீரசிங்கம்), நின்னடி சரணடைந்தோம் சண்முகா (தங்கராசா தமயந்தி), நல்லூரின் நற்றமிழே (தமிழமுதன் அபிநாத்), மயிலேறி எங்கும் வரும் நல்லூரா (சின்னையா சிவபாலன்), தமிழுக்கு இனியவன் (புலோலியூர் த.உமாசுதன்), அர்த்தமுள்ள இந்துமதம் (பா.பிரசாந்தனன்), பாலாவியின் கரைமேல் தேவன் எனை ஆள்வான் (கே.எஸ்.சிவஞானராஜா), ஆறுமுக நாவலரின் மகத்துவம் (சுவாமிநாதபிள்ளை தேவமனோகரன்), பல்வேறு பெயர்களில் அறியப்படும் யாழ்ப்பாணத்து முருகன் ஆலயங்கள் (சண்முகலிங்கம் சஜீலன்), தமிழிசையின் மீட்டுருவாக்கத்தில் விபுலாநந்த ஆளுமை (என்.சண்முகலிங்கன்), பிரபஞ்சப் பிளவும் உளப் பிளவும் இட அமைவியலாக கந்தபுராணக் காட்சியளவையியல் (சி.யமுனானந்தா), மானுடனும் ஒளி வழிபாடும் (ஆரணி விஜயகுமார்), ஆன்மீகத்தை அகம் நிறைத்தார் பாரதி (மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா), மனித வாழ்க்கையில் ஆன்மீகம் கலந்த அறிவியல் (வைத்தியலிங்கம் பாலகிருஷ்ணன்), மானிட வாழ்க்கையை அர்த்தமுடையதாக்கும் யோகக் கலை உணர்த்தி நிற்கும் வாழ்வியற் கூறுகள் (ஸ்ரீ நதிபரன்), திருக்கேதீச்சரத்தின் மகிமை (ஆ.கீர்த்தனா), சைவ மரபு சிவாகமங்களை அடிப்படையாகக் கொண்டது (ச.பத்மநாபன்), 2021இல் யாழ் விருதினைப் பெறும் திருக்கேதீச்சரம் ஆலயமும் கருங்கல் சிற்பக் கோயில் திருப்பணியும் (ப.ஆறுமுகதாசன்) ஆகிய ஆக்கங்களும்; இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்

Ny’s First Pre

Blogs The bottom line From Nyc Sports betting: boylesports online betting Bonuses & Codes Just what are Particular Wager Brands On the Caesars Nyc? Courtroom