16118 கேதீச்சர தேனமுதம்: திருக்கேதீச்சர ஆலய மகா கும்பாபிஷேகப் பெருவிழா மலர்.

த.முத்துக்குமாரசுவாமி (மலராசிரியர்). திருக்கேதீச்சரம்: திருக்கேதீச்சர ஆலய திருப்பணிச் சபை, திருக்கேதீச்சர ஆலய நம்பிக்கைப் பொறுப்பாளர் சபை, 1வது பதிப்பு, ஜீலை 2022. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ் பிரைவேட் லிமிட்டெட், 48 B, புளுமெண்டால் வீதி).

xxxiv, (33), 263 பக்கம், ஒளிப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 32.5×23 சமீ.

இவ்விழா மலர்க் குழுவில் மலராசிரியராக த.முத்துக்குமாரசுவாமி அவர்களும், நூலாக்கக் குழுவினராக வே.கந்தசாமி, செ.இராகவன், செ.சி.இராமகிருஷ்ணன், அ.கயிலாசபிள்ளை, ஐ.தயானந்தராசா ஆகியோரும் பணியாற்றியுள்ளனர். ஆசிச் செய்திகளும் வாழ்த்துச் செய்திகளும், நிழற்படத் தொகுப்பு, ஆலயங்கள், திருக்கேதீச்சர ஆலய வரலாறு, தேவார காலமும் திருக்கேதீச்சரமும், அன்னியர் ஆட்சி, நாவலரும் அவருக்குப் பின்னரும், திருப்பணிச் சபையும் அதன் பின்னரும், கருங்கற் திருப்பணி வேலைகள், திருக்கேதீச்சரம் தொடர்பான கட்டுரைகள், திருக்கேதீச்சர ஆலய திருப்பணிச்சபை ஆகிய பதினொரு பிரிவுகளில் இம்மலர் விரிவாக எழுதித் தொகுக்கப்பட்டுள்ளது.

ஏனைய பதிவுகள்

16822 பர்ஸன்ஜிய் மவ்லித்: மூலமும் மொழிபெயர்ப்பும்.

ஜஉபருல் பர்ஸன்ஜிய் (அறபு மூலம்), ஜமாலிய்யா அஸ்ஸயித் கலீல் அவ்ன் அல்ஹாஷிமிய் மௌலானா (தமிழாக்கம்). திருச்சி 620001: ஜமாலிய்யா பதிப்பகம், 22/35, இரண்டாவது தெரு, செல்வநகர், திண்டுக்கல் ரோடு, 1வது பதிப்பு, ஜனவரி 2011.