12932 – சைவ வித்தியரத்தினம் பேராசிரியர் இரா.வை.கனகரத்தினம் அவர்களி ன் நீள நினைதல் மலர்.

முருகேசு கௌரிகாந்தன், கோணலிங்கம் உதயகுமார் (மலராசிரியர்கள்). வவுனியா: கோணலிங்கம் சரஸ்வதி நிலையம், கனகராயன்குளம், 1வது பதிப்பு. 2016. (யாழ்ப்பாணம்: கணபதி பிரின்டர், 54/2, தலங்காவல் பிள்ளையார் கோவிலடி, திருநெல்வேலி).

xxxii, 212 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24 x 18.5 சமீ.

சைவ வித்தியாரத்தினம் நீள நினைதல் காலமும் கருத்தும், ஆசிச் செய்திகள் ஆகியவற்றுடன், வீரசைவக் கோட்பாடுகளும் அதன் சமுதாய நோக்கமும், பகவத் கீதை- அதன் முக்கியத்துவம் பற்றிய ஒரு குறிப்பு, சைவசமய பாரம்பரியம், சேரமான் பெருமான் செந்தமிழ் மாலை, வழிபாடு, சங்கர வேதாந்தமும் சைவ சித்தாந்தமும், திருமுறை காட்டும் கோமானும் ஜப்பானியக் கமியும், மட்டக்களப்புப் பிரதேசத்தில் கந்தபுராணம் நாடக வடிவங்களைக் கொண்ட ஓர் ஆய்வு நோக்கு, பெரியபுராணமும் சமயப்பண்பாடும், பண்டைத்தமிழர் இசைக்கருவிகள், பள்ளுப் பிரபந்தத்தின் தோற்றமும் வளர்ச்சியும், தமிழில் பதிக இலக்கியத்தின் தோற்றம், சங்க இலக்கியத்தில் மெய்ப்பொருள் தேடல், இலங்கைப் பல்கலைக்கழக வளர்ச்சிக்குத் தமிழர் பங்களிப்பு, தமிழ் வரிவடிவமும் இலக்கண மரபும், யாழ்ப் பாணத் தமிழ்மொழியினதும் முஸ்லிம் தமிழ் மொழியினதும் மாற்றுப் பெயர்கள்- ஓர் ஒப்புமை ஆராய்ச்சி, தமிழ் இலக்கணப் பதிப்புக்கள்- அடைவு உருவாக்கத்தி லிருந்து வரலாறு எழுதுதல், ஒளவையாரின் கல்வியொழுக்கம்-ஒரு நோக்கு, மனம் பற்றிய அறிகையும் மேலைப்புலத் தேடலும், Pளலஉhழடழபல யனெ வாந அலளவநசல ழக உழளெஉழைரளநௌள, பாடசாலைகளில் பெறுமானக் கல்வி, ஒன்றிணைந்து வாழ்வதற்கான கல்வி: தேவைகளும் அறைகூவல்களும், கற்றல்-கற்பித்தல் செயன்முறை மூலம் ஆக்கத்திறன் விருத்தி, வன்னிமையின் நாட்டாரியல் ஆய்வில் பேராசிரியர் இரா. வை.கனகரத்தினம், தமிழில் மதனநூல் பதிப்பு, நம் உரைநடையில் இடம்பெற வேண்டியவர்கள் ந.கந்தசாமி எனும் புலமையாளன், ஈழத்துக் கவிதைகளில் தொன்மம் சொற்பொருள் விளக்கம், இங்கிலாந்தின் விவசாயப் புரட்சியும் நில அடைப்பு இயக்கங்களும், கட்டற்ற சர்வதேச வர்த்தகமும் றிக்காடோவின் ஒப்பீட்டு நன்மைத் தத்துவமும்: ஒரு கோட்பாட்டுப் பகுப்பாய்வு, நன்றி மறப்பது நன்றன்று, பேராசிரியர் இரா.வை. கனகரத்தினம் அவர்களின் வாழ்க்கைக் குறிப்புக்கள் (சுருக்கம்) ஆகிய ஆக்கங்கள் இம்மலரை அணிசெய்கின்றன.

ஏனைய பதிவுகள்

A complete Guide to Panda Slots

Content Tunes Currency Multiplier 100 percent free Harbors Zero Obtain In the first place, Panda Miracle by the RTG is just one of the current

14070 சைவ விரதங்கள்:

ஓர் அறிமுகம். ப.சிவானந்த சர்மா (புனைபெயர்: கோப்பாய் சிவம்). யாழ்ப்பாணம்: ப.சிவானந்த சர்மா, சிவன்கோவில் அருகாமை, ஆவரங்கால், புத்தூர், 1வது பதிப்பு, பெப்ரவரி 1987. (பளை: சிவ-அன்பன் க.குமாரசாமி, வேல் அழகன் பதிப்பகம், கண்டி