16168 இஸ்லாமிய நாகரிகத்தின் மூலங்கள்.

M.Z.M. நபீல். கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2021. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).

xx, 181 பக்கம், விலை: ரூபா 700., அளவு: 22×14.5 சமீ ISBN: 978-624-6164-03-4.

இஸ்லாம் தனக்கான தனி அடையாளத்தைக் கொண்டதாகவும், நெகிழ்ச்சித் தன்மை உடையதாகவும் விளங்குகின்றது என்பதை ஒப்பீட்டாய்வு ரீதியாக விளக்குவதே இந்நூலின் மைய நோக்கமாக இருக்கிறது. இஸ்லாமிய நாகரிகம்: ஓர் அறிமுகம் (நாகரிகம் என்றால் என்ன?, அத்-தௌஹீத் – எகத்துவம், ரிஸாலத் – தூதுத்துவம், ரிஸாலத் ஏன் அவசியம்?, மஆத் -மறுமை வாழ்வு), இஸ்லாமிய நாகரிகத்தின் தூய்மையைப் பாதிக்கும் இரு முக்கிய அம்சங்கள் (அஷ்-ஷிர்க், பித்அத்), முஸ்லிம்களின் கலாசாரத்தில் பிற கலாசாரங்களின் தாக்கங்கள் (கிரேக்க நாகரிகத்தின் செல்வாக்கு, பாரசீக நாகரிகத்தின் செல்வாக்கு, உரோம நாகரிகத்தின் செல்வாக்கு, இந்து நாகரிகத்தின் செல்வாக்கு), இஸ்லாமிய புத்துயிர்ப்புப் பணியும் பங்களிப்பும் (தஜ்தீத், இமாம் கஸ்ஸாலி, ஷாஹ் வலியுல்லாஹ் திஹ்லவி, சேர் செய்யித் அஹமத் கான்) ஆகிய நான்கு இயல்களில் இவ்வாய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இஸ்லாமிய நாகரிகத்தின் இலட்சியத்தையும் அதன் சென்நெறிகளையும் புரிந்து கொள்வதற்கான களத்தை அமைத்து அதுபற்றிப் பொது வெளியில் கலந்துரையாடப்படவேண்டியதன் அவசியத்தை அறிவிப்பதையும் பட்டதாரி மாணவர்களுக்கான பாடநூலாக விதந்துரைப்பதையும் இலக்காகக் கொண்டு இந்நூல் எழுதப்பட்டுள்ளது. M.Z.M. நபீல் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் சிரேஷ்ட விரிவுரையாளராகப் பணியாற்றுகின்றார்.

ஏனைய பதிவுகள்

Shaman’s Dream Slot Online slots

Blogs Mayan Stackways – general dialogue Top ten Microgaming Jackpot Slots Mayan Money Position Remark & Totally free Demonstration Play Colt Cash: Hold and you