செ.அன்புராசா. மன்னார்: முருங்கன் முத்தமிழ்க் கலாமன்றம், 1வது பதிப்பு, டிசம்பர் 2020. (யாழ்ப்பாணம்: ஜே.எஸ். பிரின்டர்ஸ், சில்லாலை வீதி, பண்டத்தரிப்பு).
xii, 119 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 22×15 சமீ., ISBN: 978-955-4609-12-9.
இந்நூலாசிரியர் சமூக நலன் பற்றிய அக்கறையோடும் சொந்த மண் பற்றிய நேசிப்போடும் அதிர்வுகள் என்ற தலைப்பில் வெற்றிகரமாக வெளியிட்ட முதல் இரு பாகங்களைத் தொடர்ந்து இப்பாகம் மூன்றாவதாக வெளிவந்துள்ளது. தனிமனித ஆளுமை சார்ந்த நான்கு ஆக்கங்களும் (உயிரை மாய்க்க எவருக்கும் உரிமையில்லை/ குப்பைகளை நீக்க வழி அவற்றை அகற்றுவது தான்/ நம் தமிழ் வாழவும் வேண்டும் நாம் அதனை வளர்க்கவும் வேண்டும்/ உணவுக்கு உப்புப் போல உறவுக்கு நட்பு), சமூகம் சார்ந்த ஐந்து ஆக்கங்களும் (மரணமும் மறைபொருளே/ நாய்களும் நாங்களும்/ இயற்கையை மதிக்காவிட்டால் அது நம்மை மிதிக்கும்/ தண்ணீர்ப் பிரச்சினைக்குத் தீர்வு/ கல்வி அடைவு மட்டத்தினை அதிகரிக்க), அரசியல் சார்ந்த மேலும் நான்கு ஆக்கங்களுமாக (வாக்களிப்பிலிருந்து விலகி வாக்காளர் தவறிழைக்கக் கூடாது/ புலிக்கதை தொடரப்போகின்றது/ உயிர்த்த ஞாயிறு மானிடம் மரித்த ஞாயிறா?/உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்புப் பின்னணியில் நடப்பதென்ன?) மொத்தம் 13 ஆக்கங்களை இத்தொகுப்பில் வழங்கியுள்ளார்.