வே.கருணாகரன், என்.விஜயசுந்தரம் (மலராசிரியர்கள்). யாழ்ப்பாணம்: மணிவிழாக் குழுவினர், 1வது பதிப்பு, மார்ச் 2008. (யாழ்ப்பாணம்: ஆந்திரா டிஜிட்டல் பிரின்டர்ஸ்).
68 பக்கம், அட்டவணைகள், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 25 x 18 சமீ.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கல்வியியல் துறைப் பேராசிரியர் மா.சின்னத்தம்பி அவர்களின் மணிவிழாவை முன்னிட்டு 20.03.2008 அன்று கொக்குவில் இந்துக் கல்லூரியில் ஒழுங்குசெய்யப்பட்ட மணிவிழாவின்போது வெளியிடப்பட்ட மலர் இது. மணிவிழாக் குழுவின் தலைவராக வேலணை மத்திய கல்லூரி அதிபர் பொ.அருணகிரிநாதர் அவர்களும், செயலாளராக கொக்குவில் இந்துக் கல்லூரி ஆசிரியர் என்.விஜயசுந்தரம் அவர்களும் பணியாற்றியுள்ளனர். வாழ்த்துரைகளுடன் பலாலி ஆசிரியர் கலாசாலையின் ஓய்வுபெற்ற அதிபர் திரு. சோ.பத்மநாதன் எழுதிய ‘சின்னத்தம்பி-சில தரிசனங்கள்’ என்ற கட்டுரையும், ‘வழிகாட்டியோன் வாழ்க நீடூழி’, ‘மாணவர் மனதில் தடம்பதித்த பேராசான் எம்.எஸ்.’ ஆகிய இரண்டு கவிதைகளும், ‘மணிவிழா நாயகனின் வாழ்வும் வளர்ச்சியும்’ என்ற தலைப்பில் அவரது வாழ்க்கைப் பதிவுகளும், கல்விப் பேராசானின் கட்டுரைகள் என்ற பகுதியில் ‘கிராமிய சமூகங்களும் பாடசாலைகளும்: ஒன்றிணைந்த அணுகுமுறை’, ‘வறியவரும்-பாடசாலையும்: இடைவெளி அதிகரித்துச் செல் கின்றதா?’ ஆகிய இரு கட்டுரைகளும், இறுதியாக- மணிவிழா நிகழ்ச்சி நிரலும் இம்மலரில் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 45071).