முருகேசு கௌரிகாந்தன் (மலராசிரியர்). யாழ்ப்பாணம்: மணிவிழா அமைப்பு, தேசிய கல்வியியற் கல்லூரி, 1வது பதிப்பு, மே 2013. (யாழ்ப்பாணம்: கரிகணன் (தனியார்) நிறுவனம், 681, காங்கேசன்துறை வீதி).
237 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24 x 19 சமீ.
யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரியின் பீடாதிபதியாகத் தலைமைப் பொறுப்பேற்றிருந்த சங்கரப்பிள்ளை கதிரவேலு யோகநாதன் அவர்கள் சேவை ஓய்வு பெறுவதையொட்டி 18.5.2013அன்று மணிவிழா பாராட்டு நிகழ்வொன்று கல்லூரியில் ஒழுங்குசெய்யப்பட்டிருந்தது. இத்தருணம் வெளியிடப்பட்ட சிறப்பு மலர் இதுவாகும். அருளாசிகளும், வாழ்த்துச் செய்திகளும், திரு. ளு.மு.யோகநாதனின் வாழ்வும் பணியும் பற்றிய செய்திகளும், தமிழ், ஆங்கில மூலமான கட்டுரைகளும், கவிதைகளும், பீடாதிபதி அவர்கள் தொடர்பாக அவரிடம் பயின்ற முகிழ்நிலை ஆசிரியர்கள் கூறிய இரத்தினச் சுருக்கமான கருத்துக்கள் மற்றும் இவர் தொடர்பான நிழற்படங்கள் என்பன இம்மலரை அலங்கரித்துள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 54649).