16182 மனச் சோலை.

பவானி சற்குணசெல்வம். கொழும்பு 11: பூபாலசிங்கம் பதிப்பகம், 202, செட்டியார் தெரு, 1வது பதிப்பு, 2021. (கொழும்பு 11: பூபாலசிங்கம் பதிப்பகம், 202, செட்டியார் தெரு).

vii, 225 பக்கம், விலை: ரூபா 500., அளவு: 21.5×14 சமீ., ISBN: 978-624-5582-00-6.

பவானி சற்குணசெல்வம் அவ்வப்போது எழுதிய சமூகவியல், அறிவியல் கட்டுரைகளின் தொகுப்பு. குழந்தைகள் வளர்ப்பு, கல்வியின் மகிமை, தாய் மொழிக் கல்வியின் அவசியம், இளைஞனே தடுமாற்றம் இல்லாது போராடு-வெற்றி நிச்சயம், இளைய தலைமுறையினரின் மனநலம் காப்பது அவசியம், மனவெழுச்சி நிறைந்த குமரப் பருவம், குறைந்த மன அழுத்தமும் சிறந்த வாழ்வும், பாடசாலை செல்லும் மாணவருக்கான பாலியற் கல்வி, மீ டூ (Me Too Movement), மனநோயும் அதன் அறிகுறிகளும், பெண்ணியம் பற்றி ஆண்களும் பேசவேண்டும், நெருக்கீட்டிற்கு பிற்பட்ட மனவடு நோய் (PTSS), மனநலம், அவதானக் குறை மிகையியக்கம் குறைபாடு (ADHD), இன்றைய இளம் சந்ததியினரும் மது மற்றும் போதைப்பொருள் பாவனையும், ஆளுமைக் கோளாறு, தற்கொலை, அதிகம் தற்கொலை செய்துகொள்வது ஆண்களே ஏன்?, காமத்துப்பால், அது வன்முறை என்று அவளுக்குத் தெரியாது, மாதவிடாய் நிற்றல் (Menopause), பெண்களில் மனச்சோர்வு, பாலியல் வன்முறைகள் அதிகரிக்கக் காரணமென்ன?, கொரொணா நமக்குக் கற்றுத்தந்த பாடம், மாற்றுப் பாலினத்தவர் தொடர்பான சமூகப் புரிதல், மறதி நோய் (Dementia) ஆகிய 26 கட்டுரைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்