16186 இலங்கைச் சமூகத்தையும் பண்பாட்டையும் வாசித்தல்: தெரிவுசெய்யப்பட்ட கட்டுரைகள் : 3ஆவது தொகுதி 2000-2005.

சசங்க பெரேரா, தா.சனாதனன், பா.அகிலன் (தொகுப்பாசிரியர்கள்). கொழும்பு 8: சமூக பண்பாட்டு உயர் கற்கைகளுக்கான கொழும்பு நிறுவனம், 199 A, கிங்ஸ் வீதி, 1வது பதிப்பு, 2005. (யாழ்ப்பாணம்: கரிகணன் (தனியார்) நிறுவனம், 424 A, காங்கேசன்துறை வீதி).

(6), 313 பக்கம், விலை: ரூபா 950., அளவு: 22×15 சமீ., ISBN: 955-1493-09-5.

இத்தொகுப்பின் வழியாக வந்து சேரும் ஆய்வுக் கட்டுரைகள் 2000இற்கும் 2005இற்கும் இடையிலான காலகட்டத்தில் பெரும்பாலும் ஆங்கிலத்திலும் சிங்களத்திலும் வெளிவந்த கட்டுரைகளின் தமிழ்மொழிபெயர்ப்பாகும். இலங்கையில் அடையாளம் தொடர்பான அரசியல் என்ற பிரிவில் ‘எல்லா வேடர்களும் எங்கு சென்று விட்டனர்? இலங்கையில் பௌத்தமும் முதுகுடித் தன்மையும்” (கணநாத் ஒபேசேகரா)  என்ற கட்டுரை இடம்பெற்றுள்ளது. இலங்கையில் அரசியல் வன்முறை தொடர்பான அரசியல் என்ற பிரிவில் ‘ஆவி பீடித்தல்களும் பழி தீர்க்கும் பிசாசுகளும்” (சசங்க பெரேரா) என்ற கட்டுரையும், இலங்கையில் மதமும் சடங்குகளும் தொடர்பான அரசியல் என்ற பிரிவில் ‘மாறாத வகையில் திரும்பத் திரும்பச் செய்தலின் அசாத்தியம் பற்றி” (பொப் சிம்சன்), ‘ஆறுமுக நாவலர்: 1850 அளவில் சைவப் பிரசங்க மரபும் சமயத்தின் நிர்ணயமும்” (பேனாட் பேற்) ஆகிய இரு கட்டுரைகளும் இடம்பெற்றுள்ளன. இலங்கையில் காண்பியங்கள் தொடர்பான அரசியல் என்ற பிரிவில் ‘இலங்கைச் சமகாலக் காண்பியக் கலை நடைமுறைகளும் தொன்னூறுகளின் போக்கும்” (ஜகத் வீரசிங்க), ‘ஈஸ்ட்மன் கலர் பூசிய யாழ்ப்பாணத்துக் கடவுளர்கள்” (தா.சனாதனன்), ‘தூ தருவோ, சோப் ஒபெறா, தொலைக்காட்சி, சனரஞ்சகக் கலாச்சாரம் மற்றும் சனரஞ்சகக் கலாசாரத்தின் மூலதனம்” (இரஞ்சித் பெரெரா) ஆகிய மூன்று கட்டுரைகளும், இலங்கையில் பண்பாடும் உயிரியல் ஒழுக்க நெறி தொடர்பான அரசியலும் என்ற பிரிவில், ‘சாத்தியமற்ற நன்கொடை: சமகால இலங்கையில் உடல்கள், புத்தமதம் மற்றும் உயிரியல் ஒழுக்கம்” (பொப் சிம்சன்) என்ற கட்டுரையும் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்