16190 வடந்தை 2022.

அ.சண்முகதாஸ், திருமதி சி.சாந்தினி, ஜோன்சன் ராஜ்குமார் (தொகுப்பாசிரியர்கள்). யாழ்ப்பாணம்: பண்பாட்டலுவல்கள் திணைக்களம், கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சு, வடக்கு மாகாணம், செம்மணி வீதி, நல்லூர், 1வது பதிப்பு, 2022. (யாழ்ப்பாணம்: நியூ எவகிறீன் அச்சகம், இல. 693, காங்கேசன்துறை வீதி).

ix, 79 + 40 பக்கம், ஒளிப்படத் தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 26×18.5 சமீ., ISBN: 978-624-5911-20-2.

வடமாகாணத்தின் பண்பாட்டை ஆய்வுரீதியாக அடையாளப்படுத்துகின்ற பணியைச் செய்கின்ற நோக்கில் வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் வருடாந்தம் வெளியிடப்படும் ஆண்டு மலரின் 2022ஆம் ஆண்டுக்கான இதழ் இது. இவ்விதழில், வரலாற்று வழித்தடத்தில் பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் சுவடுகள் (ராஜமல்லிகை சிவசுந்தரசர்மா), நவாலியூர் சோமசுந்தரப் புலவர் மரபும் நவீனமும் (சி.குருபரநாத்), கலையோடு இயைந்த வாழ்வு (கதிர்காமு ரட்ணேஸ்வரன்), மறைந்த கலைஞரின் வாழ்வியல் பற்றிய அனுபவப் பகிர்வு (ஸ்ரீ காயத்ரி இராசையா), பாரம்பரிய உணவுப் பழக்கவழக்கங்கள் (சி.கீதநந்தினி), நாகர் இன ஆட்சியும் (நாக) தீவகத்தில் அவர்களது பண்பாட்டுக் கூறுகளின் நீட்சியும் (காசிநாதன் நிருபா), வரலாற்றில் தொல்புரம் முத்துமாரி அம்மன் கலைத்தேர் (வேலுப்பிள்ளை அம்பிகைபாகன்), எங்கே செல்கின்றோம்: அனுபவங்களும் அவதானிப்புகளும் (தக்ஷாயினி செல்வகுமார்), இலங்கையின் வடமாகாணத்தில் உள்ள சுற்றுலாத் தலங்களை மேம்படுத்தல் (ஞானப்பிரகாசம் யூட் அல்போன்ஸஸ்), யாழ்ப்பாணம் பாசையூர் பிரதேசமும் அதனுடன் இணைந்த கலைகளும் கலைஞர்களும் (யூ. மேவிஸ் ஜீன்சியா), மானிட வாழ்க்கையை அர்த்தமுடையதாக்கும் யோகக் கலை உணர்த்தி நிற்கும் வாழ்வியற் கூறுகள் (ஸ்ரீ நதிபரன்),  இந்து நிர்வாகவியல் கட்டமைப்பு (கு.றஜீபன்), உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் வீணில் உண்டு கழித்திருக்காது சிந்தனை செய்வோம் (அ.சிவஞானசீலன்) ஆகிய தலைப்புகளில் எழுதப்பட்ட பதின்மூன்று கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. பின்னிணைப்பாக 2022ஆம் ஆண்டுக்கான கலைக்குரிசில் விருது, இளங்கலைஞர் விருது, சிறந்த நூற்பரிசு பெறுவோர் விபரம் என்பன தரப்பட்டுள்ளன.

ஏனைய பதிவுகள்

Węgiel aktywny czysty farmaceutyczny

Content Dla ludzie sprawującej pieczę zastępczą (rodziciel zamienny, familijny budynek człowieka) – Najlepsza gra w kasynie Bet at home Podłączanie energicznych albo pasywnych narzędzi głośnikowych