16192 பண்பட்ட எண்ணங்கள்: பண்பாடுசார் கட்டுரைகள்.

சு.குணேஸ்வரன், க.அனுசன் (தொகுப்பாசிரியர்கள்). அல்வாய்: பாமாலயம், கவிஞர் செல்லையா வீதி, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2022. (யாழ்ப்பாணம்: ஆகாயம் பதிப்பகம், இமையாணன், உடுப்பிட்டி).

42 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×14.5 சமீ.

தமிழ்ச் சமூகத்தின் உணர்வையும் உயிர்ப்பையும் தக்கவைப்பனவற்றுள் பண்பாட்டுச் செயற்பாடுகளுக்கு முக்கியமானதோர் இடமுண்டு. மக்களின் மரபுவழிச் செயற்பாடுகளிலும் பண்பாட்டுக் கூறுகளிலும் புழங்கு பொருட்களிலும் அவை உயிர்ப்புடன் வாழ்கின்றன. இன்றைய இளைய தலைமுறையினர் அவற்றை அறிந்துகொள்வதற்கும் முன்னெடுத்துச் செல்வதற்கும் இக்கட்டுரைகள் ஒரு தூண்டுதலாக அமைகின்றன. இந்நூலில் தண்ணீர் (தொ.பரமசிவன்), குலதெய்வம்: இது எங்க சாமி (தொ.பரமசிவன்), தமிழர் உணவு (தொ.பரமசிவன்), பனை உணவுகள் (எஸ்.சிவலிங்கராஜா), கிழங்கு உணவுகள் (எஸ்.சிவலிங்கராஜா), சோறு விற்றல் (தொ.பரமசிவன்), உணர்வும் உப்பும் (தொ.பரமசிவன்), மகனறி தந்தை அறிவு (மனோன்மணி சண்முகதாஸ்), பேரக் குழந்தைகள் (தொ.பரமசிவன்), இறப்புச் சடங்கும் விருந்தோம்பலும் (தொ.பரமசிவன்), ஈனர்க்கு உரைத்திடில் இடரதாகுமே (மனோன்மணி சண்முகதாஸ்), கோதுபோற் போகுமுடம்பு (மனோன்மணி சண்முகதாஸ்) ஆகிய தலைப்புகளில் இவை எழுதப்பட்டுள்ளன. அமரர் திருமதி துரைராசா மகேந்திரராணி (10.11.1955-05.08.2022) அவர்களின் 31ஆம் நாள் நினைவு வெளியீடாக 04.09.2022 அன்று வெளியிடப்பட்ட நூல்.

ஏனைய பதிவுகள்