தாபி.சுப்பிரமணியம் (மலர்க் குழுவின் சார்பில்). திருக்கோணமலை: தவத்திரு தனிநாயகம் அடிகளார் நினைவு மன்றக் குழு, 1வது பதிப்பு, செப்டெம்பர் 1993. (திருக்கோணமலை: பிறைட்ஸ் அச்சகம்).
(38) பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24 x 18 சமீ.
ஜோஸப் கிங்ஸிலி சுவாம்பிள்ளை, சொ.கணேசநாதன், எம்.ஏ.சி.முகைதீன், க.தியாகராஜா எஸ்.எதிர்மன்னசிங்கம், நா.புவனேந்திரன் ஆகியோரின் வாழ்த்துரைஃ ஆசியுரைகளுடன் வெளியிடப்பெற்றுள்ள இம்மாட்சி நயப்பு மலரில் ஓரினத்தவர், தமிழர் பண்பாட்டின் கோட்பாடுகள் (முதுமுனைவர் தவத்திரு தனிநாயகம் 924 மொழியியலாளர்கள் 532 நூல் தேட்டம் – தொகுதி 13 அடிகளார்), தனிநாயகம் அடிகளாரின் வாழ்க்கை விருது வாக்கு, பன்மொழிப் புலவர் தனிநாயக அடிகள், தனிநாயகம் அடிகளார் நடாத்திய தமிழாராய்ச்சி மாநாடுகள், தனிநாயக அடிகளாரின் தனிப்பண்பாடு, அனைத்துலகத் தமிழியலாய்வின் தந்தை: தனிநாயகம் தமிழாராய்ச்சி மாநாடுகள் எதற்காக…, தமிழ் ஆராய்ச்சியும் தனிநாயக ஆய்வகமும் – வே.அந்தனிஜான் அழகரசன் அடிகள், தனிநாயகம் ஒரு தனிநாயகம், தனிநாயக அடிகளார் பற்றி இவர், தவத்திரு தனிநாயகம் அடிகளார் நினைவு மன்றக் குழு, திருமலையில் நடைபெற்ற முன்னைய நிகழ்வு, தமிழ்த்திரு தனிநாயகம் அடிகளார் நினைவு தின விழா, நன்றி மறப்பது நன்றன்று ஆகிய தலைப்புகளின்கீழ் தமிழ்த்தூது தனிநாயகம் அடிகளார் பற்றிப் பேசும் படைப்பாக்கங்கள் இம்மலரில் இடம்பெற்றுள்ளன. திருக்கோணமலையில் அமைக்கப்பட்ட நினைவு மன்றக் குழுவின் தலைவராக புனித மரியாள் பேராலயத்தின் பங்குத்தந்தை அருட்திரு வு.பயஸ் பத்மராஜா அடிகளாரும், செயலாளராக புனிதவளனார் வித்தியாலய அதிபர் திரு தா.பி. சுப்பிரமணியம் அவர்களும் பங்காற்றினர். (இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 004049).