12944 – வண. கலாநிதி ஹயசிந்து சிங்கராயர் தாவீதடிகளார்.

ஸ்ரீலங்கா புத்தகசாலை. யாழ்ப்பாணம்: ஸ்ரீலங்கா புத்தகசாலை, காங்கேசன்துறை வீதி, 1வது பதிப்பு, 1971. (யாழ்ப்பாணம்: ஸ்ரீலங்கா அச்சகம், காங்கேசன்துறை வீதி).

33 பக்கம், விலை: ரூபா 1.00, அளவு: 20.5 x 13.5 சமீ.

சொற்பிறப்பு ஒப்பியல் தமிழ்-சிங்கள அகராதியை இயற்றியவரும் இம்மொழிகளின் பொதுத்தாய் ஆகிய தொல் திராவிடம் அன்றேல் சீரிய சிறந்த தாமீழ மொழியை விளக்குபவருமான வண கலாநிதி ஹயசிந்து சிங்கராயர் தாவீதடிகள் பற்றிய இந்நூலானது இவரைக் குறித்து 1971ஆம் ஆண்டில் பத்திரிகைகளில் வெளியிடப் பட்ட பத்துக் கட்டுரைகளின் தொகுப்பாகும். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 2634. நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தின் சேர்க்கை இலக்கம் 004797).

ஏனைய பதிவுகள்

14205 திருக்கேதீச்சர கௌரிநாயகி பிள்ளைத் தமிழ்.

சி.இ.சதாசிவம்பிள்ளை. புங்குடுதீவு 12: சி.ஆறுமுகம், பதிப்பாசிரியர், தமிழகம், 2வது (மீள்)பதிப்பு, 2015, 1வது பதிப்பு, 1976. (கொழும்பு 6: குளோபல் கிறபிக்ஸ், கொழும்புத் தமிழ்ச்சங்க ஒழுங்கை, வெள்ளவத்தை). 86 பக்கம், விலை: ரூபா 150.,

12138 – சைவ நற்சிந்தனை.

நா.முத்தையா. நாவலப்பிட்டி: நா.முத்தையா, ஆத்மஜோதி நிலையம், 1வது பதிப்பு, மார்ச் 1967. (கொழும்பு: மெய்கண்டான் அச்சியந்திரசாலை, 161, செட்டியார் தெரு). 24 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 18×12.5 சமீ. சிவயோக சுவாமிகள் வாழ்ந்து

14336 பிரதேச செயலகமும் பொது மக்களுக்கான சேவைகளும்-ஓர் அறிமுகம்.

சிவலிங்கம் புஷ்பராஜ், நயினாமலை முரளிதரன். கொழும்பு: மலையகப் பட்டதாரிகள் சமூகம், 1வது பதிப்பு, ஜுன் 2014. (கொழும்பு 12: காயத்திரி அச்சகம், து.டு.பு.4 டயஸ் பிளேஸ்). xxiv, 171 பக்கம், அட்டவணைகள், வரைபடங்கள், விலை: