ஏ.ஜீ.யோகராஜா. சென்னை 600 086: சிந்தனை புக்ஸ், 132/251, அவ்வை சண்முகம் சாலை, கோபாலபுரம், 1வது பதிப்பு, ஜனவரி 2020. (சென்னை: ஜெம் கிராப்பிக்ஸ்).
104 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 21×13 சமீ.
மொழியதிகாரத்துவத்தின் பிடியிலிருந்து விடுபடல், யாழ்ப்பாணத்துப் பின்நிலைச் சமூகம்: தோற்றத்துக்கான ஊற்றுவாய்-சாதியமைப்பும் பின்நிலைச் சமூகமும், சமூக சமத்துவம்: அடுத்தகட்ட நகர்வு குறித்த முன்வரைவு, முந்தைய முயற்சிகளின் இன்றைய தொடர்ச்சியாக, விளிம்புநிலைச் சமூகங்கள், சிறந்த படிப்பினைகளாக, உன்னையே நீ அறிவாய், யாழ்ப்பாண மண் கற்பாறைகளால் ஆனபோதும் நிலத்தடி நீர் இன்னும் ஓடிக்கொண்டுதானிருக்கிறது, சமூக சக்திகளுக்கான அறம்சார் கடமைகள், முன்னிலைச் சமூக சக்திகளை நோக்கி: விளிம்புநிலைச் சமூகங்களின் உளவியலைப் புரிந்துகொள்ளல், சமூக சமத்துவத்தை நோக்கிய பயணத்திற் சாதியத்தின் குறுக்கீடு, மூன்று முக்கிய சொல்லாடல்கள், விளிம்புநிலைச் சமூகங்கள் புரிந்திருக்கவேண்டிய சமூக நுண்ணரசியல், சமூக சமத்தவத்தை நோக்கிய பயணத்தில் விளிம்புநிலைச் சமூகங்களின் நடைமுறைச் செயற்பாடுகள் மற்றும் எதிர்கால வேலைத்திட்டங்கள் குறித்து, சமூக சமத்துவத்தை நோக்கிய பயணத்தில் வெளியார்த்த புறவயச் செயற்பாடு: தீர்வை நோக்கித் திரள்தல் ஆகிய 15 அத்தியாயங்களின் வாயிலாக சமூக சமத்துவம் பற்றி விரிவாக ஆய்வுசெய்யப்பட்டுள்ளது.