ந.இரவீந்திரன். கொழும்பு: சமூக விழிப்புணர்வுக்கான அமைப்பு, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2019. (வவுனியா: அகரம் பிரின்டர்ஸ், 54, கந்தசாமி கோயில் வீதி, வவுனியா).
xiii, 87 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 20.5×14.5 சமீ., ISBN: 978-955-41109-4-6.
கலாநிதி ந.இரவீந்திரனின் இந்நூல் சாதியத் தகர்ப்பு, தேசிய இன விடுதலை, மத அடிப்படைவாதங்களை முறியடித்தல் என்பனவற்றைப் பற்றிப் பேசுகின்றது. இலங்கைத் திணை அரசியலில் வர்க்கப் போராட்டம், இன்றைய உலக நிலவரமும் இலங்கை அரசியலும், தேசிய இன முரண்பாடுகள், மத அடிப்படை வாதங்கள், சாதியம், அடையாள அரசியல், திணை அரசியல்: சமூக சக்திகளும் வர்க்கப் போராட்டமும், உலகப் புரட்சி: செய்தக்க அல்ல செய்தலின் கேடுகள், தக்கன பிழைக்கும்: பொருளியலில் தீர்க்க தரிசனமும் மானுடம் பேணுதலில் கரிசனமும் ஆகிய அத்தியாயங்களின் கீழ் இந்நூல் எழுதப்பட்டுள்ளது.