16210 தமிழீழப் புரட்டு.

எம்.ஆர்.ஸ்ராலின். பிரான்ஸ் : எக்சில் வெளியீடு, 5, Rue Arthur Rimbaud, 77680, Roissy-en-Brie 1வது பதிப்பு, பெப்ரவரி 2011. (அச்சக விபரம் தரப்படவில்லை).

152 பக்கம், விலை: இந்திய ரூபா 100.00, அளவு: 20.5×13.5 சமீ.

எக்சில் சஞ்சிகையில் வெளிவந்த ஆசிரியரின் கட்டுரைகளின் தொகுப்பு. எம்.ஆர்.ஸ்ராலின், கிழக்கு மாகாணத்தின் தனித்துவத்திற்காகவும், தமிழ்-முஸ்லிம் மக்களின் நல்லுறவுக்காகவும் குரல் எழுப்பி வருபவர். தமிழ் சமூகத்தின் விடுதலை என்பதை தேசிய இனப் பார்வைக்குள் மட்டும் அணுகுவதை கடுமையாக மறுத்துவரும் இவரது கட்டுரைகள் ஆழமான மாற்றுக் கருத்தியலைப் பேசுபவை. இதில் வருணாச்சிரமத்திலிருந்து வட்டுக்கோட்டை வரை, முஸ்லீம்கள் மீதான ஒடுக்குமுறை, முஸ்லிம் தேசம் ஒ தமிழ் பாஸிஸ்டுகளின் கருத்தியல் தளம், கேடுகெட்ட தேசியத்திற்கு முன்னுதாரணமான தமிழீழம், முஸ்லீம் தேசம்: ஒரு பிறப்புரிமை: நேர்கண்டவர்: பாலைநகர் ஜிப்ரி, மீஸான் கட்டைகளின் மீள எழும் பாடல்கள்: கவிதைத் தொகுப்பு விமர்சனம், இலங்கை கிழக்கு பிளவு ஓர் தலித்திய அணுகுமுறை, வாங்கோசைகளற்ற வடக்கு காற்றால் வரண்டுபோனது தமிழ்த் தேசியமே, தோழமையுடன்: கண்களை விற்று ஓவியம் வாங்கும் திருமாவளவனை நோக்கி ஒரு திறந்த காகிதம், யாழ்ப்பாணத்தின் மானம் காக்கும் கோவணமல்ல கிழக்கு மாகாணம், கிழக்கின் சுயநிர்ணயம், கிழக்கை கிழக்காக இருக்க விடுங்கள்: நேர்காணல்-த.ஜெயபாலன், இனப்பிரச்சினைக்கான தீர்வு நோக்கிய அதிகார பகிர்வு விடயத்தில் தலித் மக்களின் நலன்கள் உத்தரவாதப்படுத்தப்படவேண்டும், யாழ்ப்பாண மேலாதிக்கமே தமிழ்-முஸ்லிம் விரிசலை ஏற்படுத்தியது: நேர்காணல்-எம்.நவாஸ் சௌபி ஆகிய தலைப்புகளில் ஆக்கங்களும் நேர்காணல்களும் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்

Nya Casinon

Content Ta en titt på hemsidan – Online Casino Reviews Recension Av Stone Gaze Of Medusa Snarlika Casinon Baksida av underben Genom Tittar Postum I