16215 கிராமிய சிறுவர் அபிவிருத்தி குழுக்களுக்கான தேசிய வழிகாட்டல்கள் மற்றும் சிறுவர் உரிமைகளை மேம்படுத்துதல்.

நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களம். பத்தரமுல்ல: நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களம், மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு. 2வது பதிப்பு, ஒக்டோபர் 2016. (அச்சக விபரம் தரப்படவில்லை).

53 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24.5×15 சமீ., ISBN: 978-955-7627-03-8.

இந்தக் கையேடானது, நன்னடத்தை, சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களம், The Institute for Participatory Interaction in Development, Terre des hommes (Tdh), Save the Children International (SCI), United Nations International Children’s Fund (UNICEF), World Vision International and Plan International ஆகியோருடன் இணைந்து உருவாக்கப்பட்டுள்ளது. அறிமுகம், கிராமிய சிறுவர் அபிவிருத்திக் குழுக்களை தாபித்தலும் அதனை பேணி வருதலும், VCDC இன் (கிராமிய சிறுவர் அபிவிருத்திக் குழுக்கள்) வழிகாட்டல் கோட்பாடுகள், பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு தேவைகளை அடையாளம் காணலும் அவற்றை மேம்படுத்தலும் ஆகிய நான்கு அத்தியாயங்களில் இக்கையேடு எழுதப்பட்டுள்ளது.

ஏனைய பதிவுகள்

No Deposit Casino Online Games

Content Best 15 Free No Deposit Casino Uk Time Limits At No Deposit Bonus Casinos Fruity King Casino How To Sign Up At 10 Deposit

14118 களுவாஞ்சிக்குடி சைவ மகாசபையின் பொன்விழா சிறப்பு மலர் 1952-2002.

மலர் வெளியீட்டுக் குழு. களுவாஞ்சிக்குடி: சைவ மகாசபை, 1வது பதிப்பு, 2002. (களுவாஞ்சிக்குடி: நியு குட்வின் அச்சகம்). viii, 95 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24.5×18 சமீ. இம்மலரில் ஆசிச்செய்திகளைத் தொடர்ந்து,

13445 புதிய இலகுபோத முதற் பாலபாடம்.

ஆ.முத்துத்தம்பிப்பிள்ளை. யாழ்ப்பாணம்: ஆ.முத்துத்தம்பிப் பிள்ளை, 39ஆவது பதிப்பு, 1962. (யாழ்ப்பாணம்: நாவலர் அச்சுக்கூடம்). 44 பக்கம், ஓவியங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×14 சமீ. இலங்கைப் பாடசாலைகளில் இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பகட்டத்திலிருந்து பயன்படுத்தப்பட்டுவந்த பிரபல்யமான