16218 இலங்கைத் தமிழர்களின் புலம்பெயர்வும் வாழ்வியலும்.

தம்பையா அரியரத்தினம். கொழும்பு : க.அரியரத்தினம், ஓய்வு நிலை அதிகாரி, ஸ்ரீலங்கா திட்டமிடல் சேவை, 1வது பதிப்பு, 2022. (யாழ்ப்பாணம்: நியூ எவகிறீன் அச்சகம், இல. 693, காங்கேசன்துறை வீதி).

110 பக்கம், விலை: ரூபா 500., அளவு: 21×15 சமீ.

யாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகக் கொண்டவரும், கோண்டாவிலை வசிப்பிடமாகக் கொண்டவருமான சமூக, சமய சேவையாளர் தம்பையா அரியரத்தினம் பத்து வெளி நாடுகளுக்குச் சென்று வந்த நிலையில் தான் பெற்ற அனுபவங்களைப் பயன்படுத்தி எழுதியுள்ள இந்நூல் 17.4.2022 அன்று இணுவில் அறிவாலய மண்டபத்தில் வெளியிடப்பட்டது. நூலில் வெளியிட்ட ஆண்டு விபரம் தரப்படவில்லை. இந்நூலில் சமர்ப்பணம், அணிந்துரை, வாழ்த்துரை, என்னுரை ஆகிய ஆரம்பப் பதிவுகளைத் தொடர்ந்து, தாயக புலம்பெயர்வு, பலம்பெயர் தமிழர் வாழ்வியல், சமூக சமய பண்பாடு, கல்வி, தொழில் வாய்ப்புக்கள், புலம்பெயர் மக்களும் பொருளாதாரமும், தமிழ் மொழிப் பற்றும் உள்நாட்டு வெளிநாட்டு அரசியலும், புலம்பெயர்வு முதியோரின் வாழ்வியல், புலம்பெயர்வால் ஏற்பட்ட தாயகத்திற்கான நன்மை, தீமைகள் ஆகிய அத்தியாயங்களின் வழியாக இலங்கைத் தமிழர்களின் புலப்பெயர்வும் வாழ்வியலும் பற்றிய தனது பார்வையை பதிவுசெய்திருக்கிறார்.

ஏனைய பதிவுகள்

16195 உறுதிகொண்ட நெஞ்சினாள்.

ஹம்சகௌரி சிவஜோதி. லண்டன் IG5 0RB : தேசம் பதிப்பகம்இ 225, Fullwell Avenue, Clayhall, Illford, 1வது பதிப்பு, நவம்பர் 2022. (யாழ்ப்பாணம்: ஜே.ஆர். இன்டஸ்ட்ரீஸ், இல. 7, உடுவில் மகளிர் கல்லூரி