16220 தகிப்பின் வாழ்வு : போரும் இடப்பெயர்வும்.

தொ.பத்தினாதன். நாகர்கோவில் 629001: காலச்சுவடு பதிப்பகம், 669, கே.பி.சாலை, 1வதுபதிப்பு, ஜனவரி 2019. (சென்னை 600 077: மணி ஓப்செட்).

104 பக்கம், விலை: இந்திய ரூபா 120., அளவு: 22×14.5  சமீ., ISBN: 978-93-88631-18-1.

அகதிகளின் வெளியேற்றம், நவீன அடிமை முறை, ஆட்சி மாற்றம், வீடுகள், மதங்கள், சாதிகள், முகாம்கள், பலிகள், ஆயுத உற்பத்தி, புலம்பெயர் சமூகங்களுக்கிடையே நிலவும் தராதரம், சட்டமும் நடைமுறைச் சிக்கல்களும், என சமகால அகதி அரசியல் பற்றிய 13 கட்டுரைகளும், முகாம் வாழ் பெண் ஒருவரின் வாக்குமூலமும், மூத்த புலி உறுப்பினர் ஒருவரின் நேர்காணலும் கொண்டது இத்தொகுப்பு. அகதி வாழ்க்கை, போரும் வாழ்வும், ரேசன் கார்டு, மௌனம், செயற்கையாக வெளியேற்றப்பட்டவர்கள், ஈழ அகதிகளின் வீடுகள், அகதிகள் அடிமைமுறையின் நவீன வடிவம், போரும் அகதிகளும், அகதி அரசியல்-அரசியல் அகதிகள், அகதி முஸ்லீம்கள், ஆட்சி மாற்றம்: சில அவதானிப்புகள், அகதி முகாம்களை மூடுவது எப்போது?, அதிகாரத்தின் பலி, 2016 சட்டமன்றத் தேர்தலும் ஈழத் தமிழரும், புலம்பெயர்ந்தவர்களின் அவமானம், பேசாப் பொருள், அகதிகளும் நடைமுறைச் சிக்கல்களும், ஜனநாயக சக்திகள் முன்னெடுப்பார்கள் ஆகிய தலைப்புகளில் எழுதப்பட்ட 18 ஆக்கங்கள்; இந்நூலில் இடம்பெற்றுள்ளன. மன்னார் மாவட்டம், வட்டக்கண்டலைப் பிறப்பிடமாகக் கொண்ட பத்தினாதன் 1990இல் தனது 16ஆவது வயதில் தமிழகத்திற்கு அகதியாகச் சென்றவர். எட்டு ஆண்டுகள் மதுரை மாவட்டம் உச்சப்பட்டி அகதிகள் முகாமில் வாழ்ந்தவர். பின்னர் சென்னைப் பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பொது நிர்வாகத்தில் உயர்கல்வி பயின்றவர். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 70288).

ஏனைய பதிவுகள்