16221 சிற்றினப் பொருளியல் : நுகர்வோர் மற்றும் உற்பத்தியாளர் நடத்தை.

நவரத்தினம் ரவீந்திரகுமாரன், கலைச்செல்வி ரவீந்திரகுமாரன். கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு 2013. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).

vii, 192 பக்கம், அட்டவணைகள், வரைபடங்கள், விலை : ரூபா 375., அளவு: 21.5×13.5 சமீ., ISBN: 978-955-659-394-5.

கொழும்புப் பல்கலைக்கழக பொருளியல்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி ந.ரவீந்திரகுமாரன் மற்றும் வியாபாரப் பொருளியல்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் கலைச்செல்வி ரவீந்திரகுமாரன் ஆகியோரால் இணைந்து எழுதப்பட்ட இந்நூல் க.பொ.த. உயர்தர மாணவர்கள், பல்கலைக்கழகப் பட்டப்படிப்பு மற்றும் பட்டப் பின் படிப்பு மாணவர்கள், பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் பொருளியல்துறை மாணவர்கள்  எனச் சகல தரப்பினருக்கும் பயன்படும் வகையில் படைக்கப்பட்ட நூல். இந்நூல் சிற்றினப் பொருளியலின் இரு பிரதான அலகுகளான நுகர்வோர் நடத்தைக் கோட்பாடு (Theory of Consumer Behavior) மற்றும் உற்பத்தியாளர் நடத்தைக் கோட்பாடு (Producer Behavior) ஆகியவற்றை விளக்கும் வகையில் எழுதப்பட்டுள்ளது. பொருளியல் மாணவர்கள் எளிதில் விளங்கிக்கொள்ளும் வகையில் சிற்றினப் பொருளாதாரக் கோட்பாடுகள், மாதிரிகள், அட்டவணைகள், வரைபடங்கள் மற்றும் கணித ரீதியான சமன்பாடுகள் ஆகிய நுட்பங்களைப் பயன்படுத்தி இந்நூல் எழுதப்பட்டுள்ளது. நுகர்வோர் நடத்தைக் கோட்பாடு, உற்பத்தியாளர் நடத்தை-உற்பத்திக் கோட்பாடு மற்றும் உற்பத்தியாளர் நடத்தை-செலவுக் கோட்பாடு ஆகிய பிரதான மூன்று இயல்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. நுகர்வோர் நடத்தை, அளவுசார் பயன் அணுகுமுறை, வரிசைசார் பயன் அணுகுமுறை, நுகர்வோன் சமநிலை, உற்பத்தியாளர் நடத்தை, உற்பத்திச் சார்பு, உற்பத்தியாளர் சமநிலை, மற்றும் செலவுக் கோட்பாடு என பல்வேறுபட்ட விடயங்கள் 192 பக்கங்களில் விரிவாக ஆராயப்பட்டுள்ளன. ஒவ்வொரு இயலின் முடிவிலும் பிரதான எண்ணக் கருக்களுக்கான விளக்கங்கள் தெளிவாக வழங்கப்பட்டுள்ளன. பின்னிணைப்பாக வினாக்களும் உசாத்துணைப் பட்டியலும் சேர்க்கப்பட்டுள்ளன. (இந்நூல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 242288).

ஏனைய பதிவுகள்

All Aboard Video slot Playing Free

Content The monkey 27 slot machine – Popular Questions By the United kingdom Position Admirers And this Casinos Render No-deposit 100 percent free Revolves? Free