பி.ஆர்.பெரியசாமி (மூலம்), எச்.எச்.விக்கிரமசிங்க (பதிப்பாசிரியர்). கொழும்பு 13: எச்.எச்.விக்கிரமசிங்க, 39/21, அல்விஸ் பிளேஸ், கொட்டாஞ்சேனை, 2வது பதிப்பு, ஜீலை 2021, 1வது பதிப்பு, 1957. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், இல. 39, 36ஆவது ஒழுங்கை).
112 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 22.5×15.5 சமீ., ISBN: 978-624-98019-0-5.
‘தோட்டத்துரைமாரின் அராஜகப் போக்குகளை கவிஞர் பி.ஆர். பெரியசாமி (1914-1966) நேருக்கு நேராய்ச் சந்தித்த அனுபவத் தழும்புகளின் வெளிப்பாடு இந்நூல். அந்தக் கொடிய காலத்தை, தொழிலாளர்கள் எதிர்கொண்ட கொடூர சூழலை நெஞ்சிலே தணல் எடுத்து வார்த்தைகளிலே வார்த்திருக்கிறார் கவிஞர் பெரியசாமி. பல போராட்டங்களில் பங்கெடுத்து உழைத்த அனுபவத்தை நெஞ்சுயர்த்தி, ஆத்மார்த்தமாகப் பிரகடனம் செய்யும் வலிமை கொண்ட ஒரு பாணனின் முரசொலி இது. கோ.நடேசையரின் புரட்சிகரத் தொழிற்சங்கப் பட்டறையில் தீட்டப்பட்ட போர்வாள் அவர். கவிதையில், பாடலில், பிரசங்கத்தில், தொழிற்சங்கச் செயற்பாட்டில், போராட்டத்தில் அவர் உயிர் ஜீவன் கொண்டிருக்கிறது.” (மு.நித்தியானந்தன், பின்னட்டைக் குறிப்பு).