16228 வீதிப் பசுமையாக்கமும் பசுமையாக்கம் எதிர்கொள்ளும் சவால்களும்.

ஏ.எம்.றியாஸ் அஹமட். மருதமுனை 05: பசுமைப் பந்துகள், 224, காரியப்பர் வீதி, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2021 (அச்சக விபரம் தரப்படவில்லை).

32 பக்கம், விலை: ரூபா 75.00, அளவு: 20×14.5 சமீ., ISBN: 978-624-98297-3-2.

வீதிப் பசுமையாக்கம் என்பது ஒருவகையில் மனதின் எண்ணங்களை கிளறச் செய்துகொண்டே இருக்கும். கரையோரத்தை ஆக்கிரமிக்கும் பசுமரங்களின் பொலிவில் ஒரு முறை பசுமையாக்கல் தெரியும். இன்னொரு முறை கலாச்சார அடையாளம் தெரியும். இன்னொரு முறை உயிரினப் பல்வகைமைக் காப்புக்கான கூறுகள் தெரியும். இன்னொரு முறை இனக் காப்புக்கான கூறுகள் ஏதோவொரு வகையில் நிராகரிக்கமுடியாதபடி தெரியும். சூழலியலாளனுக்கும், உயிர்க்காப்பாளனுக்கும், பசுமையாளனுக்கும், நகரஅபிவிருத்தி திட்டமிடலாளனுக்கும், நிலத்தோற்றவுருவவியலாளனுக்கும், கவிஞனுக்கும், அரசியல்வாதிக்கும், சமூகவியலாளனுக்கும் மேலும் இவற்றை ஆய்வு செய்யும் ஆய்வாளனுக்கும் இங்கு வேலையிருக்கிறது. இந்தத் தருக்கள் இவர்களுக்காக ஏதாவது ஒன்றை எப்போதும் வைத்துக் கொண்டிருக்கும். இந்நூலில் பசுமையாக்கம் அதன் இயல்புகளும் அனுகூலங்களும், பசுமையாக்கல் எதிர்கொள்ளும் சவால்கள், உயிரியல் பல்வகைக் காப்பின் கூறுகள், இனக் காப்புக்கான கூறுகள், போன்றவைகளை சுருக்கமாக விளக்கியிருக்கிறார்.

ஏனைய பதிவுகள்