செ.சந்திரசேகரம். கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், இல. 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2022. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், இல. 39, 36ஆவது ஒழுங்கை).
xiii, 226 பக்கம், வரைபடங்கள், விலை: ரூபா 1500., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-624-6164-20-1.
இந்நூல் இலங்கையின் சமகாலப் பொருளாதார நெருக்கடி பற்றி, பரந்துபட்ட சமூக மற்றும் அரசியல் பார்வையோடு விரிந்து நோக்குகின்றது. தமிழில் இலங்கையின் சமகாலப் பொருளாதாரம் பற்றிப் பேசும் ஆய்வுகளுக்கு அருமை நிலவும் நிலையில் இந்நூலின் வருகை இலங்கைப் பொருளாதாரத்தை விமர்சன ரீதியில் வாசிக்க விரும்பும் எவருக்கும் அருந்துணையாய் அமையும். இந்நூலிலுள்ள ஒவ்வொரு அத்தியாயமும் நடுவில் விடுபட்டுப்போன அல்லது ஆய்வாளர்களால் வேண்டுமென்றே தவிர்க்கப்பட்ட இலங்கையின் இன முரண்பாட்டின் பொருளாதாரத் தாக்கம் பற்றிய ஆய்வினைச் செய்கின்றன. எனவே தான் இந்நூல் ஏனையவற்றிலிருந்து பெரிதும் வேறுபடுகின்றது. மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ள இந்நூலின் முதற்பகுதி ஒன்பது அத்தியாயங்களில் இலங்கையின் பொருளாதார நெருக்கடியின் வெளிப்பாடுகள் குறித்த ஆய்வினை மேற்கொள்கின்றது. ஒன்பது அத்தியாயங்கள் கொண்ட இரண்டாம் பகுதி இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கான மூலகாரணங்கள்; குறித்து அலசுகின்றது. மூன்றாவது பகுதி பொருளாதார நெருக்கடியின் மீட்சிக்கான வழிமுறைகள் பற்றி ஆராய்கின்றது. ஒவ்வொரு அத்தியாயமும் தனித்து நிலைத்திருக்கக்கூடிய விதமாக அறிமுகம் தொடக்கம் முடிவுரைகளோடு உசாத்துணைகளையும் கொண்டிருக்கின்றது. செல்வரத்தினம் சந்திரசேகரம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பொருளியல்துறையில் இளமாணிப் பட்டத்தினையும் கொழும்புப் பல்கலைக்கழகத்தில் முதுமாணிப் பட்டத்தினையும் பெற்று அங்கு சிறிது காலம் சேவையாற்றிய பின் 2002இல் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் இணைந்து, பின்னர் புலமைப்பரிசில் மூலம் சீனாவின் ர்ரயணாழப பல்கலைக்கழகத்தில் கலாநிதிப் பட்டத்தையும் பெற்றுக்கொண்டார். தற்போது யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பொருளியல்துறைத் தலைவராகவும் பேராசிரியராகவும் பணிபுரிகின்றார்.