16234 எழுந்து முன்னேற முடியாமல் இறுகிப் போயிருக்கும் இலங்கையின் பொருளாதாரம்.

அ.வரதராஜா பெருமாள். லண்டன்: சமூகம் இயல் பதிப்பகம், 317, பெருந்தெரு வடக்கு, ஈஸ்ட்ஹாம், 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2022. (சென்னை 600077: மணி ஆப்செட்).

302 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா: 1500, இந்திய ரூபா 350., அளவு: 22.5×15 சமீ., ISBN: 978-624-99441-0-7.

அண்ணாமலை வரதராஜா பெருமாள் 1953ஆம் ஆண்டு யாழ்ப்பாணம், வண்ணார்பண்ணையில் பிறந்தவர். 1973இல்  மறைந்த பத்மநாபா, புஷ்பராஜா ஆகியோருடன் இணைந்து ‘தமிழ் இளையோர் பேரவை” யில் 1973-1975 காலகட்டத்தில் பொதுச் செயலாளராகப் பணியாற்றியவர். வடக்கு கிழக்கு இணைந்த மாகாண அரசின் முதலமைச்சராக இந்திய இராணுவ காலத்தில் சேவையாற்றியவர். இந்நூலில் இவர் எழுதிய 23 கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. திக்குத் திசை அறியாது திணறி நிற்கும் சுதந்திர இலங்கையின் பொருளாதாரம், மக்களின் வாழ்வுரிமைகள் உறுதிபட சுயசார்பு நிலையை அடையவேண்டும், மண்பரப்பின் எல்லைகளால் நாடு அமையும்-ஆனால் மக்களின் சமூக பொருளாதாரப் பரப்பே தேசமாகும், எட்டு மணி நேரம் கடுமையாக உழைத்தும் வறுமைக் கோட்டுக்குள்ளேயே சுழலும் வாழ்க்கை, சர்வதேச சமநிலையின் கணக்கில் இலங்கையின் வறுமைக்கோடு, இலங்கையின் பொருளாதாரமோ வீழ்ச்சிப் பாதையில் இளையோர்களோ உரிய வேலை வாய்ப்புக்காக வீதிகளில், ஆதாரங்களை இழந்து சேடமிழுக்கும் ஆபத்தில் அந்தரிக்கும் இலங்கையின் அரசியற் பொருளாதாரம், வரப்புயர நீருயர நெல்லுயர குடியுயர கோனுயரும், வரவு-செலவுகளின் சரியான சமன்பாட்டில் பயணிக்கும் பொருளாதாரமே சரியாது முன்னேறும், அரச நிர்வாக துறைகளில் அளவுக்கு மீறி ஆட்கள் ஆண்டு தோறும் ஏறுகிறதே! இறங்குவதாக இல்லை!, நாட்டைத் திறந்தது இறக்குமதிகளுக்கே வாய்த்தது-ஏற்றுமதிகளுக்கான தகுதிகளில் முன்னேறவில்லை!, இருக்கும் ஆற்றல்களுக்கும் வளங்களுக்கும் ஏற்பவே தேட்டங்களுக்கான நாட்டங்களில் முயலவேண்டும்!, கடன் மற்றும் அந்நியச் செலாவணி வழியாக இலங்கைக்கு ஏற்பட்ட கெட்ட காலம், இக்கட்டான குணாம்சங்கள் கொண்ட இலங்கையின் தேயிலைத் தோட்டங்கள், தேயிலையோடு வாழும் மக்களின் வாழ்க்கையில் மறுமலர்ச்சி ஏற்பட தீவிர மாற்றங்கள் வேண்டும், போதிய உணவுக்கான வளங்கள் இருந்தும் இறக்குமதிகளை நம்பி வாழும் இலங்கை, ஏற்ற பொருளாதார நிலையை எட்டாத கட்டத்தில் சேதன விவசாய முயற்சிகள் சேதங்களையே ஏற்படுத்தும், அரசாங்கத்தின் ஆசைகளை அழகாக காட்டிய 2022ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டம், கனவுகள் வாக்குறுதிகளானால் நடைமுறைகள் கானல்நீரே!, கொள்ளையே ஆள்பவர்களின் குறிக்கோளானால் கஜானாக்கள் காலியாகும்-கடனிலே நாடு மூழ்கும், அரசியல் ஜனநாயகமும் அடிப்படை சுதந்திரங்களும் அதிகாரப் பகிர்வும் அபிவிருத்திக்கான அத்திவாரங்கள், சிறியனவாயும் சிதறுண்டும் பரவிக் கிடக்கின்ற வறுமையான கிராமங்களின் நாடே இலங்கை, இன்றைக்கு உரியதான முன்னேற்றங்களுக்கு ஏற்ற அரசியற் பொருளாதார அமைப்பு மாற்றம் வேண்டும் ஆகிய தலைப்புகளில் இவை எழுதப்பட்டுள்ளன.

ஏனைய பதிவுகள்