16235 நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளும் சவால்களும்.

ஏ.எம்.அஸ்லம் சஜா. அக்கரைப்பற்று-2: பேஜஸ் புத்தக இல்லம், 117, பட்டினப்பள்ளி வீதி, 1வது பதிப்பு, ஒக்டோபர்; 2021. (அக்கரைப்பற்று: நியூ செலெக்ஷன் ஓப்செட் பிரின்டர்ஸ், C.E.B. மின்சார நிலைய வீதி).

100 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 390., அளவு: 22×15.5 சமீ., ISBN: 978-624-6047-02-3.

24 மே 2019 முதல் 27 செப்டெம்பர் 2019 வரையான காலப்பகுதியில் விடிவெள்ளியின் வெள்ளிக்கிழமை இதழில் தொடர்ச்சியாக எழுதப்பட்ட 17 கட்டுரைகளின் விரிவாக்கப்பட்ட தொகுப்பாக இந்நூல் வெளிவந்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையினால் 2015ஆம் ஆண்டில் நடைமுறைக்கு வந்த 2030ஆம் ஆண்டிற்கான 17 நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளை மையமாகக் கொண்டு இலங்கைச் சூழலை மையப்படுத்திய சில வழிகாட்டல் குறிப்புகளை இவ்வாக்கங்கள் உள்ளடக்குகின்றன. வறுமையில்லா வாழ்வு, பட்டினியற்ற வாழ்வு, சுகதேகியாக வாழ்தல், தரமான கல்வியும் சமூக முன்னேற்றமும், சமூக முன்னேற்றத்தில் பெண்களின் பங்களிப்பு, தூய்மையான நீரும் ஆரோக்கிய வாழ்வும், நவீன வினைத்திறன் மிக்க சக்தியும் நமது எதிர்காலமும், ஆக்கத்திறனுடைய வேலைவாய்ப்பும் பொருளாதார வளர்ச்சியும், உட்கட்டமைப்பிலும் தொழில் மையங்களிலும் புத்தாக்கத்தின் அவசியம், சமத்துவமின்மை: சமூக அபிவிருத்திக்குப் பாரிய சவால், உறுதியும் பாதுகாப்பும் கொண்ட நகரங்கள், குடியிருப்புகளின் உருவாக்கம், நுகர்வு மற்றும் உற்பத்தி வழிமுறைகளும் பொறுப்புடைமையும், காலநிலை மாற்றங்களையும் அதன் விளைவுகளையும் சிறப்பாக எதிர்கொள்ளல், கடல் மற்றும் கடல்சார் வனப்பாதுகாப்பு, சுற்றுச்சூழல் வளங்களையும் பல்லுயிர்களையும் பாதுகாத்தல், சமாதானச் சுழலும் சமூக நீதியும், நிலைபேறான அபிவிருத்தியில் நமது வகிபாகம் ஆகிய தலைப்புகளில் இக்கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன. கலாநிதி அஸ்லம் சஜா சமூக அபிவிருத்தி, மனிதாபிமான உதவி, திட்ட முகாமைத்துவம், மற்றும் காலநிலை மாற்றம் போன்ற துறைசார் விடயங்களில் பத்து வருடங்களுக்கு மேல் சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்களில் பணியாற்றிய அனுபவம் பெற்றவர்.

ஏனைய பதிவுகள்