16239 வலுவிழந்தோரின் வாழ்வை வளமாக்குவோம்.

ந.சிவராஜா (மூலம்), மலையரசி சிவராஜா (தொகுப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: திருமதி மலையரசி சிவராஜா, 47/3, ஆடியபாதம் வீதி, திருநெல்வேலி, 1வது பதிப்பு, பெப்ரவரி 2023. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).

ix, 72 பக்கம், ஒளிப்படம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×14.5 சமீ.

இது வைத்திய கலாநிதி அமரர் நடராஜா சிவராஜா அவர்களின் ஞாபகார்த்த வெளியீடு. 20.02.2023 அன்று இடம்பெற்ற அன்னாரின் நான்காம் ஆண்டு நினைவுதின நிகழ்வின்போது வெளியிடப்பெற்றது. மாற்று வலுவுள்ளோர் மனங்களை வென்றவர்-வைத்திய கலாநிதி நடராஜா சிவராஜா என்ற தலைப்பில் சுன்னாகம் வாழ்வகம் அமைப்பின் தலைவர் ஆ.இரவீந்திரன் அவர்களின் அறிமுக உரையுடன் இந்நூலில் வைத்திய கலாநிதி என்.சிவராஜா அவர்கள் எழுதி அவ்வப்போது ஊடகங்களிலும் ஆய்வரங்குகளிலும் வெளியிடப்பெற்ற ஒன்பது கட்டுரைகள் அவரது துணைவியார் வழியாகத் தொகுத்துத் தரப்பட்டுள்ளன. ஊனமுற்றவர்களுக்கு பண உதவியல்ல-சமூக உறவே தேவை, ஊனமுற்றோர் புனர்வாழ்வு, வலுவிழந்தோரின் வாழ்வை வளமாக்குவோம், Let’s enrich the lives of people with disabilities, Disability and Health, வலுவிழந்தோருக்கு வலுவூட்டும் வலுவிழந்தோர் புனர்வாழ்வுச் சங்கம், வலுக் குன்றுதலும் அதன் சவால்களும், Disability and it’s  Challenges,  வலுக்குன்றியவர்களும் சமூகத்தின் வகிபாகமும் ஆகிய தலைப்புகளில் இக்கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன.

ஏனைய பதிவுகள்