கமலினி கதிர். திருச்சி 620 003: இனிய நந்தவனம் பதிப்பகம், எண் 17, பாய்க்காரத் தெரு, உறையூர், 1வது பதிப்பு, ஜீன் 2022. (சென்னை: ஏ.கே. பிரிண்டர்ஸ்).
xiii, 14-104 பக்கம், புகைப்படங்கள், விளக்கப்படங்கள், விலை: இந்திய ரூபா 100.00, அளவு: 21×14 சமீ., ISBN: 978-93-93735-03-4.
நூலாசிரியர், குழந்தைகளின் வளர்ச்சியில் பெற்றோர்களின் பங்கு என்ன என்பதை விளக்கும் கருத்துக்களை இந்நூலில் படிமுறையாக வழங்கியிருக்கிறார். குழந்தைகளிடம் நற்பண்புகள் ஓங்கிட, இரண்டு மாதத்திலிருந்து ஆறு மாதம், ஆறு மாதத்திலிருந்து இரண்டு வயது வரை, இரண்டு வயது-நான்கு வயது, நான்கு ஐந்து வயதுப் பராயம், ஆறு வயதுக்கும் பதினொரு வயதுக்கும் உட்பட்டோர், பன்னிரண்டு வயதுக்கு மேற்பட்டோர் என ஏழு பகுதிகளாக வகுத்து தனது ஆலோசனைகளை வழங்கியிருக்கிறார்.