மா.மகேஸ்வரன்; (இதழாசிரியர்). யாழ்ப்பாணம்: தொழிலாளர் கல்விக் கழகம், கல்வியியற்றுறை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், திருநெல்வேலி, 1வது பதிப்பு, 1991. (யாழ்ப்பாணம்: தாசன் அச்சகம், மகேந்திரா வீதி).
(35), 83 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24×19 சமீ.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் தொழிலாளர் கல்வி பேராசிரியர் அ.துரைராசா துணைவேந்தராகவிருந்த காலத்தில் 1991 மே மாதம் ஆரம்பிக்கப்பட்டது. அத்துறையினரின் வெளியீடாக இச்சிறப்பிதழ் வெளிவந்துள்ளது. இவ்விதழின் உதவி ஆசிரியர்களாக ச.மகிந்தராஜ், சி.கலாராஜ், ஐ.ஆனந்தராஜ், ந.பழனிவேல் ஆகியோர் இயங்கியுள்ளனர். இவ்விதழில் பொருளாதாரத்தில் அரசாங்கத் தலையீடு அவசியமா?, பொருளியல் ஒரு விஞ்ஞானமாகும், இலங்கையில் கூட்டுறவு இயக்கம், நாட்டின் அபிவிருத்தியில் தொழிலாளர் பங்கு, யாழ். பல்கலைக்கழகத்தில் தொழிலாளர் கற்கைநெறி சில இலக்குகள், தொழிலாளர் கல்வி-ஒரு கண்ணோட்டம், நடத்தையியலும் ஸ்கின்னரும், தொழிலாளர் கல்வி, Basic English for Workers : A curriculum for Domination, Mathematics : Some other Issues பல் பகுதியங்கள் (Palymers), தொழில்சார் நெருக்கீடுகளும் சமகால உளத்தாக்கமும், நிர்வாகத்தில் தொழிலாளர் பங்குவகித்தல், சேவைக்காலப் பயிற்சியும் நன்மைகளும், அழகியற் கலையும் ரசக் கொள்கையும், சங்ககால மக்களின் தொழில்களும் தொழில் முறைமைகளும், தருமம், தொழிலாளி, தொழிலாளர் கல்விநெறி வாழி, தொழிலாளர் கல்வி, மனித வாழ்க்கையும் விஞ்ஞானமும், நெய்தல் வாழ்க்கை, நில-நீர் குறிகாட்டிகள், தலைமை வகித்தல், அனைத்துலகத் தொழிலாளர் அமையம், தொழிலாளர் கல்வியின் ஆரம்பமும் எதிர்காலமும் ஆகிய 26 ஆக்கங்கள் இடம்பெற்றுள்ளன.