16260 சுவடுகள் 95.

அ.சிவஞானசீலன் (மலர்ஆசிரியர்). யாழ்ப்பாணம்: கலைப்பீடம் (3ஆம் வருடம்), யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம், திருநெல்வேலி, 1வது பதிப்பு, 1995. (யாழ்ப்பாணம்: தாசன் அச்சகம், மகேந்திரா வீதி).

94 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×14.5 சமீ.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மூன்றாம் ஆண்டு மாணவர்களால் வெளியிடப்படும் மாணவர்களின் முகவரி மலர் (மாணவர்களின் முகவரி, எண்ணங்கள் அடங்கிய சுவடுகள்) இதுவாகும். 1991/92-ம் கல்வி ஆண்டில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப் பீடத்திற்கு தெரிவுசெய்யப்பட்ட மாணவர்களில் ஒரு தொகுதியினர் பொதுக் கலைமாணிப் பட்டப் படிப்பினை முடித்து வெளியேறவுள்ளனர். நான்கு வருட கற்கைநெறி கற்கும் மாணவர்கள் இன்னொரு வருட காலம் இங்கு கல்வி பயில உள்ளனர். இம்மாணவர்கள் தங்களுடைய கல்வியாண்டு அணியினர் அனைவரதும் முகவரி கொண்ட கைநூலாக இந்நூலை வெளியிடுகின்றனர். இம்மலர் மூன்று பிரிவுகளாக வகுக்கப்பட்டுள்ளது. முதற் பிரிவு (1-65) சக மாணவர்கள் பற்றிப் பரஸ்பரம் எழுதப்பட்ட சுவையான குறிப்புகளையும், இரண்டாம் பிரிவு (66-92) 1991/1992 கல்வி ஆண்டு மாணவர்களின் முகவரிகளையும், மூன்றாம் பிரிவு (93-94) மாணவர்களின் கவிதை ஆக்கங்களையும் கொண்டுள்ளது.

ஏனைய பதிவுகள்

16047 நாம் எவ்வண்ணம் வாழ்ந்தாக வேண்டும்.

இராஜேஸ்வரி ஜெகானந்தகுரு. தெகிவளை: இராஜேஸ்வரி ஜெகானந்தகுரு, 24 C, எதிரிவீர அவென்யூ, 1வது பதிப்பு, ஜனவரி 2022. (அச்சக விபரம் தரப்படவில்லை). 60 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×15.5 சமீ. மாதா-பிதா-குரு-தெய்வம், தெய்வம்,