16271 தம்பலகாமம் ஊர்ப்பெயர் ஆய்வு.

த.ஜீவராஜ். தம்பலகாமம்: தம்பலகாமம் திருமதி ஜீவரத்தினம் தங்கராசா, சின்னவர்ணமேடு, 1வது பதிப்பு, ஜீலை 2022. (திருக்கோணமலை: ஸ்ரீராம் பிரிண்டர்ஸ், 159யு, கடல்முக வீதி).

301 பக்கம், விலை: ரூபா 900., அளவு: 21×14.5 சமீ., ISBN: 978-955-44132-2-1.

வரலாற்று எழுத்தியலின் பண்புகளுக்கு அமைவாக ஆவணங்கள், சாசன ஆதாரங்கள், இலக்கிய சான்றுகள் என்பவற்றோடு, பல முதன்நிலைத் தரவுகளையும், தனது தேடல் அனுபவக் குறிப்புகளையும், விமர்சனங்களையும் உள்ளடக்கி எழுதப்பட்டுள்ளது. முதலாம் இயல் ஊர்ப்பெயர் ஆய்வோடு ஒரு பயணம் என்ற அறிமுகத்தையும், 2ம் இயல் தம்பலகாமம் பிரதேசம், தம்பலகாமம் ஊர் ஆகியவற்றின் இரு அறிமுகங்களையும், 3ம் இயல் தம்பலகாமம் கல்வெட்டின் கதையாகவும் விரிகின்றது. 4ஆம் இயல் ஊர்ப்பெயர் திரிபு பற்றிப் பேசுகின்றது. 5ஆம் இயல் தம்பலகாமப்பற்று, தம்பலகாம தேசம், தம்பை நகர், தமனதோட்ட,Tamblegam, தம்பலகமம், தாயூர் தம்பலகாமம், தம்பலகமுவ ஆகிய எட்டு ஊர்ப்பெயர் வரலாறுகள் பற்றித் தனித்தனியாகப் பேசுகின்றது. 6ஆம் இயல் தம்பலகாமம் ஊர்ப்பெயர் ஆய்வாக அமைகின்றது. 7ஆம் இயல் கல்வெட்டுகள், செப்பேடுகளில் ‘காமம்” எனும் ஈற்றுப்பெயர் கொண்ட இடப்பெயர்கள் பற்றிக் குறிப்பிடுகின்றது. இறுதியான 8ஆம் இயல் முடிவுரையாக அமைகின்றது. இந்நூலின் பின்னிணைப்புகளாக தம்பலகாமத்தின் ஒரு கல்வெட்டு-பொலநறுவைக் காலத்துப் படைப்பற்று (மறைந்துபோன சிலாசனம்) பற்றிய பேராசிரியர் சி.பத்மநாதன் அவர்களின் கட்டுரையும், தம்பலகாமத்தில் கண்டுபிடிக்கப்பட்ட அரிய தமிழ்க் கல்வெட்டு பற்றிய பேராசிரியர் பரமு புஷ்பரத்தினம் அவர்களின் கட்டுரையும் இடம்பெற்றுள்ளன. நூலாசிரியர் ‘ரங்கநாயகியின் காதலன்” என்ற நூலை 2005இல் எமக்களித்த தம்பலகாமம் க.வேலாயுதம் அவர்களின் மகன் (கலாபூஷணம் வே.தங்கராசா) வழிப் பேரனாவார்.

ஏனைய பதிவுகள்

Superiores Lugares Sobre Tragamonedas Online

Content Sus particulares De el Máquina Tragaperras Cleopatra | haga clic en este sitio Vantagens Movernos Desvantagens De Roma Extra Juegostragamonedas777 Com Su Tragamonedas Favorita

15 Euro Bonus Ohne Einzahlung Casino

Content Wie Kann Ich Kostenlose Casino Aktionen Erhalten? Ist Das Ggbet Casino Seriös? Es Gibt Spielbanken Mit Boni Für Unterschiedliche Bereiche Der Plattform Energiekasino Bonus