அ.கருணாகரர். யாழ்ப்பாணம்: சிறீ சுப்பிரமணிய பொத்தகக் களஞ்சியம், 235, காங்கேசன்துறைச் சாலை, 2வது பதிப்பு, 1994. (யாழ்ப்பாணம்: சிறீ சுப்பிரமணிய அச்சகம், 63, டீ.யு. தம்பி ஒழுங்கை).
(4), 224 பக்கம், விளக்கப்படங்கள், விலை: ரூபா 100., அளவு: 21×14 சமீ.
இந்நூல் புதிய பாடத்திட்டத்துக்கு அமைய எழுதப்பட்ட பௌதிகவியல் பாடநெறி யின் ஒளியியல் பகுதியைக் கொண்டதாகும். ஒன்பது அத்தியாயங்களில் எழுதப்பட்டுள்ள இந்நூல் ஒளியும் நேர்கோட்டுச் செல்லுகையும், தளமேற்பரப்புக் களில் தெறிப்பு, கோளவாடிகளில் தெறிப்பு, தளமேற்பரப்புகளில் ஒளி முறிவு, அரியங்களினூடு முறிவு, நிறப்பிரிக்கையும் திருசியங்களும், வளைந்த கோள மேற்பரப்பில் முறிவு, கமரா, கண், கண்ணின் குறைபாடுகள், ஒளியியற் கருவிகள் ஆகிய அத்தியாயத் தலைப்புக்களில் ஒளியியல் பாடவிளக்கங்களை உள்ளடக்கி யுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 40394).