16276 அற்றைத் திங்கள் : கூத்துருவ நாடகம்.

யோ.யோண்சன் ராஜ்குமார். யாழ்ப்பாணம்: திருமறைக் கலாமன்றம், 238, பிரதான வீதி, 1வது பதிப்பு, ஜ{ன் 2016. (யாழ்ப்பாணம்: மதி கலர்ஸ் பிரின்டேர்ஸ், முத்திரைச் சந்தியடி, நல்லூர்).

xv, 104 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 20.5×14.5 சமீ., ISBN: 978-955-7530-02-4.

 ‘அளிக்கை” என்ற முதற் பகுதியில் ‘அற்றைத் திங்கள்” – நாடக பாடம் முதல் 56 பக்கங்களிலும் விரிகின்றது. ‘அளிக்கைப் பதிவுகள்” என்ற இரண்டாம் பகுதியில், பயன்படுத்தப்பட்ட கூத்து மெட்டுக்கள், அரங்காடியோர், அரங்கேறிய திகதிகள் ஆகிய மூன்று விடயங்கள் இடம்பெற்றுள்ளன. ‘விளைவுகள்” என்ற மூன்றாவது பகுதியில் கண்டு கலந்தோர் உரைத்தவை, ஊடக விமர்சனங்கள் என்பன இடம்பெற்றுள்ளன. இந்நூல் யோ.யோண்சன் ராஜ்குமார் அவர்களின் ஆக்கத்தில் அச்சில் வெளிவரும் நான்காவது நூலாகும். முன்னதாக ‘கம்பன் மகன்” என்ற தென்மோடி நாட்டுக்கூத்து நூல், ‘கொல் ஈனும் கொற்றம்”  என்ற கூத்துருவ நாடகநூல், ‘அமைதிப் பூங்கா” என்ற சிறுவர் நாடக நூல் என்பன வெளிவந்துள்ளன. பறம்பு மலைச் சிற்றரசன் பாரி பற்றிய கதை இது. முல்லைக் கொடிக்குத் தன் தேரையே ஈந்தவன் என்ற பெயரைப் பெற்றவன். மூவேந்தர்கள் தமிழகத்தை ஆண்ட காலத்தில் சிற்றரசன் பாரியின் பெயர் ஓங்குவதைக் கண்டு சினந்த அவர்கள் பாரியின் மீது போர் தொடுத்தனர். பாரியும் தன் பலத்தை எடைபோடாது மூவேந்தருடன் போரிடத் தீர்மானித்தான். மூவேந்தரின் சதிவாளுக்கு இரையானான்.

ஏனைய பதிவுகள்

Nachfolgende Besten Echtgeld Spielautomaten 2024

Content Wie gleichfalls Casino Spielautomaten Erledigen Beliebte Slots Spielautomaten Via Diesseitigen Höchsten Gewinnchancen Die Unzweifelhaftigkeit In Seriösen Angeschlossen Casinos Verbunden Spielotheken über Spielautomaten Land der