16281 நொண்டி நாடகம் : தென்மோடிக் கூத்து.

யோ.யோண்சன் ராஜ்குமார் (பதிப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: பண்பாட்டலுவல்கள் திணைக்களம், கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சு, வடக்கு மாகாணம், 1வது பதிப்பு, 2021, (யாழ்ப்பாணம்: நியூ எவகிறீன் அச்சகம், இல. 693, காங்கேசன்துறை வீதி).

xxviii, 111 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×15 சமீ., ISBN: 978-624-5911-06-6.

இந்நொண்டி நாடகமானது யாழ்ப்பாணத்தில் பல கிராமங்களிலும் மன்னார், மட்டக்களப்பு போன்ற இடங்களிலும் பாரம்பரியமாக ஆடப்பட்டுவந்த தென்மோடிக் கூத்தாகும். இதுவரை நூலுருப்பெறாமல் கையெழுத்துப் பிரதிகளாக வலம்வந்த இக்கூத்துப்பிரதி இப்பொழுது முதன்முதலில் நூலுருப்பெற்றுள்ளது. இணுவில் சின்னத்தம்பிப் புலவர், மன்னார் கீத்தாம்பிள்ளைப் புலவர், குருநகர் அவுறாம்பிள்ளைப் புலவர் போன்றவர்கள் நொண்டி நாடகங்களை எழுதினார்கள் என்ற தகவல்கள் இருந்தாலும் அவை எங்கே என்பதோ, கிடைக்கப்பெற்ற பிரதிகள் யாருடையவை என்பதோ இன்று அறியமுடியாதுள்ளது. நெடுந்தீவில் வழங்கிவந்த, அண்ணாவியார் அமிர்தநாயகம் அவர்களால் பேணப்பட்டு வந்த ஓரளவு முழுமையானதாகக் காணப்பட்ட இந்த நொண்டி நாடகத்தினை இனங்கண்டு ஆழமான ஆய்வுரை ஒன்றுடன் கூடியதாக பதிப்புச் செய்துள்ளார்கள்.

ஏனைய பதிவுகள்

Hazard Urządzenia

Content Bezpłatne Hazard: Najważniejsze Symbole Automatów: Zagraj w irish eyes Hazard Gry hazardowe Za darmo Owe bardzo ciekawa możliwość, bo niezależnie od bonusowych zabiegów, posiadamy