16283 மகிடிக்கூத்து.

சு.சிவரெத்தினம். கொழும்பு 6: கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், இல. 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2022. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், இல. 39, 36ஆவது ஒழுங்கை).

116 பக்கம், விலை: ரூபா 700., அளவு: 22×14.5 சமீ., ISBN: 978-624-6164-30-0.

மகிடிக்கூத்து மட்டக்களப்பில் பல இடங்களில் நிகழ்த்தப்பட்டு வந்த ஒரு கொண்டாட்ட அரங்காகும். கலாநிதி சு.சிவரெத்தினம் தற்போது மகிடிக் கூத்தை பதிப்பிக்கின்றார். குடும்பம் ஒன்று வாய்மொழியாகக் காத்துவந்த வரலாற்றுப் பொக்கிஷமொன்றை இன்னொரு தலைமுறை-அதுவும் அச்சமூகம் சாராத ஒரு தலைமுறை மீட்டெடுத்து நமது நாடக உலகுக்கு அளிப்பது இதன்மூலம் சாத்தியமாகியுள்ளது. செழுமையான ஓர் ஆற்றுகை முறையையும் பாரம்பரியத்தையும் இது கொண்டிருப்பது இதன் ஓர் முக்கிய அம்சமாகும். அரசரையும் கடவுளரையும் முனிவரையும் போற்றிப்பாடும் கூத்துமரபுக்கு மறுதலையாக உயர்ந்த நிலையில் இருப்போரையும் பிராமணரையும் முனிவரையும் கேள்விக்கும் கேலிக்கும் உள்ளாக்கும் தன்மையை இது கொண்டிருப்பது இன்னொரு முக்கிய அம்சமாகும். இந்த மகிடி ஏடு மட்டக்களப்புப் பண்பாட்டின் ஒரு பகுதி. மட்டக்களப்பின் அடையாளமும் கலைப்பொக்கிஷமுமான கூத்துக்களையும் கூத்து ஏடுகளையும் புரிந்துகொள்ள உதவும் திறவுகோல் எனலாம். (பின்னட்டைக் குறிப்பு, பேராசிரியர் சி.மௌனகுரு).

ஏனைய பதிவுகள்

Tractor Also have Co Mastercard

Articles The simple, Secure Solution to Pay bills: casino titanic Spend Your balance Completely Each month Team Insurance Faucet Your Cards Which have Contactless Spend