16284 மண்டைதீவு கலைவாரிதி வில்லியம் கஸ்பார் அவர்களின் தர்மசீலி தென்மோடி நாட்டுக்கூத்து.

வில்லியம் கஸ்பார். வேலணை: கலாசாரப் பேரவை, வேலணைப் பிரதேச சபை, 1வது பதிப்பு, டிசம்பர் 2018. (யாழ்ப்பாணம்: குரு பிரின்டேர்ஸ், 39/2, ஆடியபாதம் வீதி, திருநெல்வேலி).

x, 137 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 20×14.5 சமீ.

பாண்டியநாட்டு மாவிலாபுரியை ஆண்ட மன்னனின் மகனான முன்கோபக்கார இளவரசனிடம் சபதம் பூண்ட ஒரு வணிகப் பெண்ணின் சபதத்தை எவ்வாறு  அவள் நிறைவேற்றுகிறாள் என்பதே கதையாகும். மண்டைதீவைச் சேர்ந்த வில்லியம் கஸ்பார் 1950ஆம் ஆண்டு பிறந்தவர். தனது பன்னிரண்டாவது வயதிலேயே அண்ணாவியார் செ.பவுலீனப்புவின் உதவியுடன் நாட்டுக்கூத்தில் ஈடுபாடு கொண்டு யூதகுமாரன் நாடகத்தில் யூதகுமாரன் பாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பினைப் பெற்றிருந்தார். தொடர்ந்து ஆட்டுவணிகன் நாடகம், எஸ்தாக்கியார் நாடகம், கற்புக்கரசி இரண்டாம் பாகம் போன்ற நாடகங்களில் மேடையேறினார். 1974இல் இவர் எழுதிய நாட்டுக்கூத்து கற்புக்கரசி நாடகமாகும். 1974இல் இந்நாடகம் மேடையேற்றப்பட்டது. 1982இல் இவரது இளவரசன் நாடகம் மேடையேற்றம் கண்டது.

ஏனைய பதிவுகள்

15855 வித்துவம்: அமரர் வித்துவான் சி.குமாரசாமி அவர்களின் நினைவு மலர்.

 சி.குமாரசாமி. தெகிவளை: அமரர் வித்துவான் சி.குமாரசாமி நினைவு மலர்க் குழு, உதயாஸ் செரமிக்ஸ், 3B, காலி வீதி, 1வது பதிப்பு, 1994. (அச்சக விபரம் தரப்படவில்லை). 134 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 22×14.5