16286 வளையாபதி : தென்மோடி நாட்டுக்கூத்து.

செ.அ.அழகராஜா. யாழ்ப்பாணம்: திருமறைக் கலாமன்றம், 238, பிரதான வீதி, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2012. (யாழ்ப்பாணம்: ஜெயந்த் சென்டர், 28, மார்ட்டின் வீதி).

xii, 48 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 21×15 சமீ.

கவிஞர் செ.அழகராஜா இயற்கையிலேயே கவி புனையும் ஆற்றல் மிக்கவர். தன் சிறு வயதில் இருந்தே அண்ணாவியார் பூந்தான் ஜோசேப்புவின் கூத்துக்களில் நடித்ததுடன் அவரது நவரச நாட்டுக்கூத்து கலைமன்றத்தின் நிர்வாக உறுப்பினராகவும் இருந்தவர். ‘யாழூர் அழகன்” என்ற புனைபெயரிலும் பல்வேறு சிறுகதைகளை எழுதிவந்தவர். இவர். திருமறைக் கலாமன்றத்தின் அங்கத்தவராக இணைந்து நடிகராகவும் எழுத்தாளராகவும் அறிவிப்பாளராகவும் பல்வேறு தளங்களிலும் பணியாற்றி வருபவர். தமிழில் ஐம்பெருங் காப்பியங்கள் என அழைக்கப்படும் ஐந்து நூல்களுள் ஒன்றாக விளங்குவது வளையாபதி. ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதப்படும் இது சமண சமயம் சார்ந்த ஒரு நூல். வளையாபதியின் கதையை தென்மோடி நாட்டுக்கூத்தாக செ.அ.அழகராஜா அவர்கள் வழங்கியிருக்கின்றார். பூம்புகாரில் வாழ்ந்த பிரபல வைர வணிகன் நவகோடி நாராயணன், அவன் காந்தர்வ மணம் புரிந்த ஆடல்மகளான பூங்கொடி, அவர்களது மகன் மாறன் ஆகியோரைச் சுற்றிப் பின்னப்பட்ட கதை இது.

ஏனைய பதிவுகள்

Gamble Supplement Benefits

Articles Slot Online game Told me Buffalo Slot machine game Background Cash Stampede Revue 3 Reels Of Dynamite Here are a few these types of