16292 ஈழத்துத் தமிழ் வழக்கு அகராதி (தமிழ்-தமிழ்ஆங்கிலம்).

ஆ.சதாசிவம் (மூலம்), நவரட்ணம் குகபரன் (பதிப்பாசிரியர்). கொழும்பு 6: திருமதி திருஞானேஸ்வரி சதாசிவம், 11, சின்சப்பா வீதி, 1வது பதிப்பு, 2022. (சாவகச்சேரி: மிக்கி பிரிண்டிங் ஸ்பெஷலிஸ்ட் A9 வீதி, சங்கத்தானை).

xvi, 366 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 25.5×17.5 சமீ., ISBN: 978-624-99037-1-5.

பேராசிரியர் ஆறுமுகம் சதாசிவம் தான் வாழ்ந்த காலம் முழுதும் மொழி ஆய்வில் ஈடுபட்டவர். ஈழத்தமிழர்களின் மொழி வழக்குகளை வெளிப்படுத்த அவர் முன்னெடுத்த முயற்சிகள் முக்கியமானவை. அப்பெரியாரால் 1960 களில் ஆரம்பிக்கப்பட்டு, 1973இல் அவற்றின் பெரும்பகுதி தட்டச்சுச் செய்யப்பட்ட நிலையில் சுகவீனம் காரணமாக 1988இல் நிகழ்ந்த அவரது பெரும் பிரிவால் முடிவுறாதிருந்த இவ்வகராதித் தொகுப்பு, அவரது மறைவின் பின்  குடும்பத்தவர்களால் பேணிப் பாதுகாக்கப்பட்டு வந்துள்ளது.  அந்தக் கையெழுத்து-தட்டச்சு சுவடியின் நூலாக்கம் இதுவாகும்.

ஏனைய பதிவுகள்