16298 வன்னிப் பிராந்தியத் தமிழாராய்ச்சி மகாநாட்டு ஆய்வுத் தொகுதி (முல்லைத்தீவு, வைகாசி 1983).

சி.பத்மநாதன் (பதிப்பாசிரியர்). கொழும்பு 6: அனைத்துலகத் தமிழாராய்ச்சி மன்றம்-இலங்கைக் கிளை, 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2022. (அச்சக விபரம் தரப்படவில்லை).

xxvi, 366 பக்கம், விலை: ரூபா 2000., அளவு: 24×18.5 சமீ., ISBN: 978-624-6314-00-2.

1983ஆம் ஆண்டு மே மாதம் 27,28, 29ஆம் திகதிகளில்முல்லைத்தீவில் நடைபெற்ற வன்னிப் பிராந்தியத் தமிழாராய்ச்சி மகாநாட்டு நிகழ்வுகளின்போது சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்பு. பதிப்பாசிரியர் குழுவில் பேராசிரியர் சி.பத்மநாதன், பேராசிரியர் சி. தில்லைநாதன், கலாநிதி க. இரகுபரன், வண ஆயர் சு.ஜெபநேசன், திரு. மா.மோகனகிருஷ்ணன், திரு. விருபா குமரேசன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இதிலுள்ள ஆய்வுகள் ஐந்து பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. முதலாவது ‘இலக்கியப்” பகுதியில் கதிரைமலைப் பள்ளு (பொ.பூலோகசிங்கம்), வையா பாடல் (பொ.பூலோகசிங்கம்), சிலப்பதிகாரமும் சிலம்பு கூறலும்-ஒப்பீடு (வை.கா.சிவப்பிரகாசம்), வன்னியூர்க் கவிராயரின் கவிதைப் பண்புகள் (க.நவசோதி), வன்னி நாச்சிமார் மான்மியம்-ஓர் ஆய்வு (த.சண்முகசுந்தரம்), வன்னிப் பிரதேசத்தில் நவீன தமிழிலக்கியம் (நா.சுப்பிரமணியம்), வன்னிப் பிரதேசத்தின் கல்வி வளர்ச்சியும் இலக்கிய வளர்ச்சியும் (இ.விசாகலிங்கம்) ஆகிய ஆய்வுக் கட்டுரைகளும், இரண்டாவது ‘சமூகவியல்” பகுதியில் ஈழத்து வன்னி மக்களின் விவசாயச் சடங்கு முறைகள் (இரா.வை.கனகரத்தினம்), வன்னிவள நாட்டில் நாச்சிமார் வழிபாடு (இரா.வை.கனகரத்தினம்), வன்னிப் பிரதேச இந்துக் கிராமிய வழிபாடு-வவுனியா முல்லைத்தீவு மாவட்டங்களைக் கருத்திற்கொண்ட ஆய்வு (தமிழரசி சந்திரசேகரி), வன்னியின் பண்டைய சிவ வழிபாட்டுத் தலங்கள் சில- ஓர் ஆய்வு (சி.த.மார்க்கண்டு), வன்னிப் பிரதேசத்தில் பெருந்தெய்வ வழிபாடு (முல்லைமணி வே.சுப்பிரமணியம்), வன்னிப் பிரதேசத்தில் சிறுதெய்வ வழிபாடு (முல்லைமணி வே.சுப்பிரமணியம்), வன்னிப் பிரதேச ஐதீகங்களும் கரணங்களும் (குணலட்சுமி சிவசுந்தரம்), மரபுவழி முல்லை மண்ணில் முதுமைப் பருவம் (நா.சண்முகலிங்கன்), வவுனியா முல்லைத்தீவு மாவட்டங்களில் அறுபதுக்கு முன் கல்வி நிலை (செ.மெற்றாஸ்மயில்), வவுனியா முல்லைத்தீவு மாவட்டங்களில் அறுபதுக்குப்  பின் கல்வி நிலை (செ.மெற்றாஸ்மயில்), வன்னியில் முல்லைத்தீவு (நா.செல்வரத்தினம்) ஆகிய ஆய்வுக் கட்டுரைகளும், மூன்றாவது ‘தொல்லியலும் வரலாறும்” என்ற பகுதியில் கயிலை வன்னியனார் தர்மசாதனப் பட்டயம்-சில வரலாற்றுக் குறிப்புகள் (சி.பத்மநாதன்), அடங்காப்பற்று வன்னிமைகள் (சி.பத்மநாதன்), வரலாற்றுக் காலத்திற்கு முந்திய வன்னிநாட்டின் தொல்லியற் சான்றுகள் (சி.கா.சிற்றம்பலம்), வன்னிப் பிரதேசத்துச் சிற்பங்கள் (வி.சிவசாமி), வன்னியிற் பிராமிச் சாசனங்கள் (ஆ.வேலுப்பிள்ளை),  இலங்கையின் வன்னிப் பிரதேசத்துத் தமிழ்ச் சாசனங்கள் (கா.இந்திரபாலா), Archaeological evidences of two major routes that linked Vanni with Jaffna (பொ.இரகுபதி) ஆகிய ஆய்வுக் கட்டுரைகளும், நான்காவது ‘நாட்டார் வழக்கியல்” பகுதியில் மன்னார் முல்லைத்தீவு நாட்டுப் பாடல்கள்-ஓர் ஒப்பியல் நோக்கு (சு.வித்தியானந்தன்), மன்னார் முஸ்லிம்கள் மத்தியில் நிலவும் நாட்டார் பாடல்கள் (க.நவசோதி), ஈழத்திற் கண்ணகி வழிபாடு பற்றிய ஆய்வில் வன்னிப் பிரதேச நாட்டார் பாடல்கள் பெறும் முக்கியத்துவம் (இ.பாலசுந்தரம்), வன்னிநாட்டுப் பழமொழிகளும் மரபு வழக்குகளும் காட்டும் பண்பாடு (பார்வதி கந்தசாமி), வன்னிப் பிரதேசத்தின் பொருளாதார முயற்சிகளும் அவை பற்றிய நாட்டார் வழக்காறுகளும் (குணலட்சுமி சிவசுந்தரம்), முல்லைத்தீவுக் கூத்து மரபு (நா.செல்வரத்தினம்) ஆகிய ஆய்வுக் கட்டுரைகளும், ஐந்தாவது ‘புவியியல்” பகுதியில் வன்னிப் பிரதேசத்தின் குடிசனத்தொகை வளர்ச்சியும் பரம்பல் மாற்றங்களும் (பொ.பாலசுந்தரம்பிள்ளை), வன்னிப் பிரதேசத்தின் பொருளாதார வளர்ச்சியில் மத்திய இடங்களின் பங்கு (பொ.பாலசுந்தரம்பிள்ளை), முல்லைத்தீவு மாவட்டத்தில் நீர்ப்பாசனம் (இ.அருமைநாயகம்), கரைதுறைப்பற்று பிரதேசத்தின் நீர்ப்பயன்பாடும் பயிர்ச்செய்கையில் அதன் பிரச்சினைகளும் (நா.தேவரஞ்சிதம்), வன்னிப் பிரதேச நிலவுடமை (க.தர்மலிங்கம்), முல்லைத்தீவின் பட்டினவாக்கம் (பொ.சிங்கரத்தினம்), Agriculture in the Vanni District (Sri Lanka) during the Early period of the 19th century (பே.பஸ்தியாம்பிள்ளை) ஆகிய ஆய்வுக் கட்டுரைகளும் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்

Nuts Shamrock Position

Posts Profitable Combos To have Huge Victories Are Totally free Revolves Simply Used in Slots? Web based casinos With 100 percent free Revolves Welcome Added

Pacanele Online

Content Magic love Slot Machine | Le Slot Gratis Oral Le Stesse Delle Slot Machine Online Con Soldi Veri? Cei Apăsător Buni Developeri Să Sloturi

Free Spins Inte med Insättning

Content Vilka Casinon Äger Ej Svensk person Koncessio? Va Befinner sig Saken dä Främsta Fördelen Tillsamman Att Försöka Villig Ett Nytta Casino? Nya Bonusregler Innan