16305 பாலபாடம் : முதலாம் புத்தகம், இரண்டாம் புத்தகம், மூன்றாம் புத்தகம், நான்காம் புத்தகம்.

ஆறுமுக நாவலர் (மூலம்), இ.க.சிவஞானசுந்தரம் (பதிப்பாசிரியர்). கொழும்பு 6: தென்றல் பப்ளிக்கேஷன், 135, கனல் பாங்க் வீதி, வெள்ளவத்தை, 1வது பதிப்பு, ஆவணி 2006. (கொழும்பு 6: எஸ்.டி.எஸ். கம்பியூட்டர் சேர்விசஸ், 43, பஸல்ஸ் ஒழுங்கை).

viii, 350 பக்கம், விலை: ரூபா 325., அளவு: 22.5×15 சமீ.

ஆறுமுக நாவலர் இயற்றிய பாடபாடம் பாடநூலின் முதல் நான்கு நூல்களையும்; ஒன்று சேர்த்து இத்தொகுப்பினை இ.க.சிவஞானசுந்தரம் அவர்கள் பதிப்பித்துள்ளார். முதற் புத்தகத்தில் நெடுங்கணக்கு, சொற்கள், சொற்றொடர்கள் ஆகிய பாடங்களும், இரண்டாம் புத்தகத்தின் முதற்பிரிவில் நீதி வாக்கியங்கள், கதைகள், பூமி, மிருகம், காற்று, தேசங்கள், மாடு, பட்சி, தாவரம், வஸ்திரம், யானை, உலோகங்கள், வேளாண்மை, வியாபாரம், மெய்ம்மை, இராசி முதலியன, தாய் செய்த நன்றி, பெரியாரை வழிபடல், நித்திய கரும விதி ஆகிய பாடங்களும், இரண்டாம் புத்தகத்தின் இரண்டாம் பிரிவில் ஆத்திசூடி-மூலமும் உரையும், அநுபந்தமாக கடிதம் எழுதுகின்ற முறையும் இடம்பெற்றுள்ளன. மூன்றாம் புத்தகத்தில் நன்மாணாக்கன், நித்திரை, நித்திய கருமம், பெரியோரை வழிபடல், சற்புத்திரர்களே ஆபரணம், சகோதர சகோதரிகள், துர்வார்த்தை, உயிர்களுக்கு இதஞ்செய்தல், பெற்றாரைப் பேணல், கடவுளுதவி, புத்தியுள்ள தீர்ப்பு, கல்வி, செல்வம், கேள்வி, முயற்சி, பெண்கல்வி, காலம், உண்மையின் பயன், பரிகாசம், இந்தியா, மிருகம், புறங்கூறல், வித்தியாசாலை, புத்தகம், வேளாண்மை, நாணயம், சிநேகம், ஈகை, இலங்கை, பேராசை பெருந்துயர், வீடு, தாவரம், சிங்கம், பொய்வேடம், தென்னை, சரீர சௌக்கியம், யாக்கை நிலையாமை, சற்புத்திரர், ஒட்டகம், செய்நன்றி கொன்றவர் கெடுவர், கல்வியின் பயன், காகிதம், மழை, குதிரை, உலோகங்கள், மாணிக்கவாசக சுவாமிகள் ஆகிய பாடங்களும், நான்காம் புத்தகத்தின் முதற் பிரிவில், கடவுள், ஆன்மா, கடவுள் வழிபாடு, ஈசுரத் துரோகம், அருள், கொலை, புலாலுண்ணல், கள்ளுண்ணல், களவு, வியபிசாரம், பொய், அழுக்காறு, கோபம், சூது, செய்நன்றியறிதல், பெரியோரைப் பேணல், பசு காத்தல், தானம், கல்வி, செல்வம், தருமம், கடன்படல், இரசவாதம், வருணம், ஆச்சிரமம், நல்லொழுக்கம், கற்பு, வீட்டுவேலை, வீட்டுக்கொல்லை, ஆரோக்கியம், வியாதி தீர்த்தல், தேவாலயம், மடம், சத்திரம், தேவாலய தரிசனம், சிராக்தம், காலப் பிரமாணம், தமிழ்ப்புலமை ஆகிய பாடங்களும், இரண்டாம் பிரிவில் குறிப்புரையும் அப்பியாச வினாக்களும் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்

Gangland Slot machine

Content Playing Executives and you may Licenses: Luxury 10 free spins no deposit casino games New Gambling Knowledge By the generating support points because of