16308 மொழிக்கலசம்-பாகம் 1.

பிறைஷினி அருள்சந்திரன். யாழ்ப்பாணம்: யாழ்ப்பாணப் பெட்டகம்-நிழலுருக் கலைக்கூடம், 1வது பதிப்பு, நவம்பர் 2014. (யாழ்ப்பாணம்: அன்றா பிறிண்டேர்ஸ், இல.356A, கஸ்தூரியார் வீதி). 

118 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 20×14 சமீ., ISBN: 978-955-41940-0-7.

தமிழ், சிங்களம், ஆங்கிலம், சுற்றாடல்சார் தகவல்கள் ஆகிய பாடங்களுக்குத் தயாராகி புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கும், தரம் 6, 7 ஆகியவற்றில் பயிலும் மாணவர்களுக்கும் உரிய வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. புலமைப்பரிசில் பரீட்சையை மாத்திரம் மையப்படுத்தாமல் மொழிகளின் முக்கியத்துவம் தொடர்ந்தும் பேணப்பட வேண்டும் என்னும் ஆர்வத்தினைத் தூண்டுவதற்காகவும் தரம் 06, 07 இற்கு பயன்படக்கூடிய வகையிலும் இந்நூல் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆரம்பக் கல்வியின் ஆசிரியர் அறிவுரைப்பு வழிகாட்டி நூலின் உதவியுடன் தேவையான விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளது. மும்மொழித் தேர்ச்சியினைப் பெற்றுக்கொள்வதற்கு இந்நூல் ஓர் அத்திவாரமாக அமைகின்றது.

ஏனைய பதிவுகள்

14585 எறிகணைத் தாலாட்டு.

சாத்தானின் சகோதரன் (இயற்பெயர்: ஆ.கண்ணப்பன்). மருதமுனை: ஹிஸ் ஸபாப் கம்பியூட்டர் சேர்விஸஸ், 1வது பதிப்பு, ஜுலை 2002. (கல்முனை: க்ரேட் ட்ரஸ்ட் அச்சகம், மட்டு வீதி). 60 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20×15