16313 வானிலை அவதானிப்பும் காலநிலையும்: இலங்கையின் கிழக்குப் பிரதேசம்.

க. இராஜேந்திரம். கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், இல. 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2021. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், இல. 39, 36ஆவது ஒழுங்கை).

xii, 151 பக்கம், அட்டவணைகள்;, வரைபடங்கள், விலை: ரூபா 900., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-659-740-0.

இன்று உலகநாடுகளின் முக்கிய பேசுபொருள்களில் ஒன்று உலக காலநிலை மாற்றம் தொடர்பானதாகும். இந்நிலையில் நாடுகளினதும் பிரதேசங்களினதும் காலநிலை தொடர்பாகவும் அதில் ஏற்பட்டு வருகின்ற மாற்றங்கள் தொடர்பாகவும் உலக நாடுகள் பல்வேறு ஆய்வுகளில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் வானிலை, காலநிலை ஆகியவற்றின் முக்கியத்துவம் கருதி இலங்கையின் கிழக்குப் பிரதேசத்தினை மையமாகக் கொண்டு இந்நூல் எழுதப்பட்டுள்ளது. இந்நூல் பின்வரும் ஆறு அத்தியாயங்களைக் கொண்டுள்ளது. வானிலை அவதான நிலையங்களும், வானிலை அவதானிப்பும், ஞாயிற்றொளியும் வெப்பநிலையும், வளிமண்டல அமுக்கமும் காற்றுக்களும், ஆவியாக்கமும் ஆவியாக்க ஆவியுயிர்ப்பும், சாரீரப்பதன், மழைவீழ்ச்சி. இந்நூல் பல்கலைக்கழகங்களில் சிறப்பு மற்றும் பொதுக்கலை பட்டப்படிப்பில் புவியியலை ஒரு பாடமாகத் தமிழ்மொழிமூலம் கற்கும் மாணவர்களுக்கும் இத்துறைசார்ந்த ஆய்வாளர்களுக்கும் பொதுவாக காலநிலை தொடர்பாகவும் பிரதேச காலநிலை தொடர்பாகவும் அறிய விரும்பும் ஆர்வலர்களுக்கும் பயன்தரும். கலாநிதி க.இராஜேந்திரம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் புவியியலை சிறப்புக் கற்கை நெறியாகப் பயின்று அதே பல்கலைக்கழகத்தில் புவியியல்துறை விரிவரையாளராகப் பணியாற்றியவர். தனது முதமெய்யியல்மாணிப் பட்டத்தினை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலும் கலாநிதிப் பட்டத்தினை புதுடில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்திலும் பெற்றவர். 2008முதல் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையில் சிரேஷ்ட விரிவுரையாளராகப் பணியாற்றி வருகிறார்.

ஏனைய பதிவுகள்

15166 புதிய புவியியல் புள்ளிவிபரவியல்: அடிப்படைப் புள்ளிவிபரவியல்.

க.குணராசா. யாழ்ப்பாணம்: வி.மகாலிங்கம், ரேகா வெளியீடு, 1வது ஒழுங்கை, பிறவுன் வீதி, 1வது பதிப்பு, 1980. (யாழ்ப்பாணம்: ஸ்ரீலங்கா அச்சகம், 234 காங்கேசன்துறை வீதி). 48 பக்கம், அட்டவணைகள், வரைபடங்கள், விலை: ரூபா 6.50,

Tf Bank Kundenbetreuung

Content Vikings Go To Hell Slot Free Spins | Basiccard: Einfach and Gewiss Bares Verteilen Bares Abbuchen Unter einsatz von Der Paypal Andienen Sie das