அ.கருணாகரர். யாழ்ப்பாணம்: அ.கருணாகரர், இல.8, வைமன் வீதி, 1வது பதிப்பு, கார்த்திகை 1971. (யாழ்ப்பாணம்: த.வேலாயுதபிள்ளை, நாமகள் அச்சகம், 319, காங்கேசன்துறை வீதி).
(4), 392 பக்கம், விளக்கப்படங்கள், விலை: ரூபா 8.90, அளவு: 20.5×13.5 சமீ
11 இயல்களைக் கொண்டமைந்த இந்நூலின் முதல் மூன்று இயல்களும் காந்தவியல் தொடர்பானதாகவும், இயல் 4, 5 ஆகியவை நிலைமின்னியல் தொடர்பானதாகவும், இயல் 6 மின்னியக்கவியல் தொடர்பானதாகவும், இயல் 7முதல் 11 வரை ஓட்டமின்னியல் தொடர்பானதாகவும் வகுக்கப்பட்டுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 2294).