12611 – உயிரியல்(பொதுத் தராதரப் பத்திர வகுப்புக்குரியது).

வீ.இராமகிருஷ்ணன், த. புத்திரசிங்கம். யாழ்ப்பாணம்: வீ.இராமகிருஷ்ணன், முன்னாள் ஆசிரியர், யாழ்ப்பாண இந்துக் கல்லூரி, இணை வெளியீடு, யாழ்ப்பாணம்: த.புத்திரசிங்கம், ஆசிரியர், வைத்தீஸ்வரா வித்தியாலயம், 3வது பதிப்பு, 1965, 1வது பதிப்பு, 1962, திருத்திய 2வது பதிப்பு, 1964. (யாழ்ப்பாணம்: ஸ்ரீலங்கா புத்தகசாலை, 234, காங்கேசன்துறை வீதி).

(12), 558 பக்கம், ஒiஎ, விளக்கப்படங்கள், விலை: ரூபா 12.80, அளவு: 21.5×14 சமீ.

இந்நூல் பாடநூல் பிரசுர ஆலோசனை சபையினரால் க.பொ.த.ப. வகுப்புகளுக்குப் பாடநூலாக அங்கீகரிக்கப்பட்டது. உயிர் (உயிரியலின் வியாபகம்), உணவு (உணவு வகைகள், இலையின் அமைப்பும் பச்சிலையமும்), சமிபாடு (முலையூட்டிகளின் சமிபாடு, கலத்தகச் சமிபாடு, உறிஞ்சல்), கொண்டுசெல்லல் (தாவரங்களில் கொண்டுசெல்லல், விலங்குகளில் கொண்டுசெல்லல்), சுவாசம் (வாயுமாற்றம், சத்திச் சேமிப்புகள்), கழிவு (முலையூட்டிகளின் கழிவு), அசைவு (விலங்குகளிலும் தாவரங்களிலும் அசைவு, அசைவின் இயைபாக்கம்), இனப்பெருக்கம் (விலங்குகளிலும் தாவரங்களிலும் இனப்பெருக்கம், புத்துயிர்ப்பு), விசேட வாழ்க்கை முறைகள், பக்ரீரியாக்கள், ஈட்டம், வியாபகம், சூழலியல், மண், கூர்ப்பு, பிறப்புரிமையியல், பாகுபாடும் பெயரீடும், பொருளாதார உயிரியல், பெயரகராதி ஆகிய பல்வேறு பாடத் தலைப்புகளின்கீழ் விரிவானமுறையில் உயிரியல் பாடம் விளக்கப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 24941).

ஏனைய பதிவுகள்

14371 கொழும்பு இந்துக் கல்லூரியின் பொன்விழா மலர் 2002.

மலர்க் குழு. கொழும்பு: இந்துக் கல்லூரி, 1வது பதிப்பு, 2002. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ், 48B, புளுமெண்டால் வீதி). (34), 177 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 29×21.5 சமீ. பொன்விழாச் சிறப்பு