K.T.சுந்தரேசன். கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், இல. 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2021. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், இல. 39, 36ஆவது ஒழுங்கை).
vi, 66 பக்கம், விளக்கப்படங்கள், விலை: ரூபா 600., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-659-764-6.
எமது பாரம்பரியமான சித்த ஆயுர்வேத மருத்துவமானது நவீன மருத்துவத்தினால் தீர்க்கமுடியாத பல நோய்களுக்கு விடையாக உள்ளது. இம்மருத்துவத்தின் தேவை பற்றியும் அதன் முக்கியத்துவம் பற்றியும் இந்நூல் விபரிக்கின்றது. நவீன மருத்துவத்தால் விடைகாண முடியாத பல முக்கிய பிரச்சினைகளுக்கு விடையாக இந்நூல் அமைந்துள்ளது. உணவே மருந்தாக எனும் கருத்துடன் இந்நூல் அமைந்திருந்தாலும் உண்ணாதிருத்தல் என்பதையும் நோய்தீர்க்கும் மருந்தாக எடுத்துரைக்கிறது. வைத்திய கலாநிதி மு.வு.சுந்தரேசன், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் மருத்துவ நிபுணராகவும், கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சுகாதார பராமரிப்பு விஞ்ஞானங்கள் பீடத்தின் மருத்துவ அறிவியல் துறையில் முதுநிலை விரிவுரையாளராகவும் பணியாற்றுகின்றார். உணவே மருந்தாக, நீரிழிவு நோயும் உணவும், மாரடைப்பும் உணவும், உயர் குருதியமுக்கமும் உணவும், புற்றுநோய்களும் உணவும், தினந்தோறும் உண்ணும் உணவில் விஷமா?, தூக்கமும் ஆரோக்கியமும், குடல்வாழ் நுண்ணுயிர்களின் முக்கியத்துவம், கொழுப்புகளும் எண்ணெய்களும் பற்றி அறியவேண்டியவை, கேள்விக்குறியாகும் விஞ்ஞான ஆராய்ச்சிகள், உண்ணாதிருப்பதே மருந்தாக, உள்ளார்ந்த குணப்படுத்தும் சக்தி, எண்ணத்தின் வலிமை ஆகிய 13 அத்தியாயங்களில் போதிய விளக்கப்படங்கள் சகிதம் இந்நூல் எழுதப்பட்டுள்ளது.