16325 டெங்கு காய்ச்சல்: டெங்கு காய்ச்சல் மற்றும் டெங்கு நோய் காவியும் அதனைக் கட்டுப்படுத்தும் முறைகளும்.

ந.சுகந்தன். கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், இல. 39, 36ஆவது ஒழுங்கை, 2வது பதிப்பு, 2022, 1வது பதிப்பு, 2020. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், இல. 39, 36ஆவது ஒழுங்கை).

60 பக்கம், விளக்கப்படங்கள், விலை: ரூபா 250., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-659-698-4.

ஆசிரியர் இந்நூலில் டெங்கு நோயின் தாக்கத்தினையும், அதனை எவ்வாறு குணப்படுத்தலாம் என்பதையும் பொதுமக்கள் வாசித்து அறிந்துகொள்ளக்கூடிய வகையில் எளிய நடையில் எடுத்துரைத்துள்ளார். இலங்கையில் டெங்கு காய்ச்சலின் தாக்கம், டெங்கு காய்ச்சலின் வகைகள், நோயாளிகளுக்கான அறிவுரைகள், காய்ச்சலைக் கட்டுப்படுத்தும் முறைகள், டாக்டரின் அறிவுரைகளைப் பெற்று என்ன செய்ய வேண்டும், நீராகாரம் எடுக்கும் முறைகள், வெளியேறும் சிறுநீறின் அளவெடுக்கும் முறைகள், குருதிப் பரிசோதனை எப்போது செய்யவேண்டும், உடனடியாக வைத்தியரை நாடவேண்டிய சந்தர்ப்பங்கள் மற்றும் மக்கள் உரிய நடவடிக்கைகள் எடுக்காவிடில் ஏற்படும் டெங்கு நோயின் சிக்கல் நிலைமைகள் என்பனவற்றை மக்கள் தெளிவாக விளங்கிக்கொள்ளும் வகையில் எழுதியுள்ளார். நுலாசிரியர் யாழ்ப்பாணப் போதனா வைத்தியசாலையில் பொது வைத்திய நிபுணராகவும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவபீடத்தின் மருத்துவத்துறையின் தலைவராகவும், முதுநிலை விரிவுரையாளராகவும் விளங்குகின்றார்.

ஏனைய பதிவுகள்